பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
385

பங

உடன் போக்கு

    பங்கயப் பாசடைப் பாய்தடம்
        நீயப் படர்தடத்துச்
    செங்கய லன்றே கருங்கயற்
        கண்ணித் திருநுதலே.

203

_______________________________________________________________

கண் நுதல் அண்ணல் கடிகொள் தில்லை - இணைக்கப் படுவதொரு பொருளுமில்லாத கங்கையையுடைய வழகிய செஞ்சடையையுங் கண்ணையுடைய நுதலையுமுடைய வண்ணலது காவலைப் பொருந்திய தில்லைவரப்பின்; பங்கயப் பாசடைப் பாய்தடம் நீ - பங்கயத்தின் பசியவிலைகளையுடைய பரந்த பொய்கை நீ; கருங் கயல்கண் இத்திருநுதல் படர் தடத்துச் செங்கயல் அன்றே - கருங்கயல்போலுங் கண்ணையுடைய இத்திருநுதல் அகன்றவப் பொய்கைக்கண்வாழுஞ் செங்கயலன்றோ, அதனால், ஏந்தல் - ஏந்தால்; இங்கு நீ அயல் பணிக்கின்றது என் -நின்னோடேகுமிடத்து வேறொன்றானொருதுன்பம் வருவதாக இவ்விடத்து நீயயன்மை கூறுகின்றதென்! செங்கயற்குப் பங்கயத் தடமல்லது வேறுவேண்டப்படுவ- தொன்றுண்டோ! எ-று.

   
கண்ணுதலாகிய வண்ணலெனினுமமையும். உடன்கொண்டு போகாயாயின், அலரானும் காவன்மிகுதியானு நின்னைத் தலைப்படுதலரிதாகலிற் றடந்துறந்த கயல்போல இவளிறந்துபடுமென்பது கருத்து. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு வற்புறுத்தல்.

203