16
உடன்
போக்கு
16.11 கற்பு நலனுரைத்தல்
கற்பு நலனுரைத்தல் என்பது
தலைமகனைப் போக்குடம் படுத்திய தோழி, தலைமகளுழைச்சென்று, மகளிர்க்குப் பாதுகாக்கப்
படுவனவற்றுள் நாண்போலச் சிறந்தது பிறிதில்லை; அத்தன்மைத்தாகியநாணுங் கற்புப்போலச் சீரியதன்றென
உலகியல் கூறுவாள்போன்று, அவள் உடன்போக்குத் துணியக் கற்புநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
204. தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென்
றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
_______________________________________________________________
16.11. பொய்யொத்தவிடை
போக்குத்துணிய
வையத் திடை வழக்கு ரைத்தது.
இதன் பொருள்: ஈங்கோயிற்
சிறந்து சிற்றம்பலத்து ஆடும்-ஈங்கோ யிடத்துப் பொலிந்து மேவிச் சிற்றம்பலத்தின்கணின்றாடும்;
எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதி நுதல் - எம்முடைய கூத்தனாகிய
பிரானது வாயின்கண் எப்பொழுதும் வந்து சிறத்தற்குக் காரணமாகிய அறிவாற் சிறப்பையுடையையாகிய
மதிநுதால்; தையலாருக்கு நாண் தாயின் சிறந்தன்று-மகளிர்க்குப்பழி நீக்கிப் பாதுகாத்தலில் நாண்
தாய்போலச் சிறந்தது; அந்நாண்-அத்தன்மைத்தாகிய நாண்; தகை சால்வேயிற் சிறந்த மென்தோளி-அழகமைந்த
வேய்போலச்சிறந்த மெல்லிய தோள்களை யுடையாய்-திண் கற்பின் விழுமிது அன்று-திண்ணிய கற்புப்போலச்
சீரிதன்று எ-று.
தாயினுஞ் சிறந்ததன்று நாணென்றுரைப்பினுமமையும்.
நாணென்பது ஒருபொருட் குரிமையாகலிற் றாயென வொருமை கூறினார். “ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப”
என்பதுபோல அமையுமாறு முடைத்து. அன்றியும்.
உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
செயிர்தீர் காட்சிக் கற்புச்
சிறந்தன்று.
(தொல்- பொருள் - களவியல்
- 22)
|