பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
387

New Page 1

உடன் போக்கு

    கோயிற் சிறந்துசிற் றம்பலத்
        தாடும்எங் கூத்தப்பிரான்
    வாயிற் சிறந்த மதியிற்
        சிறந்த மதிநுதலே.

204

16.12 துணிந்தமைகூறல்

   
துணிந்தமை கூறல் என்பது உலகியல் கூறுவாள்போன்று கற்புவழி நிறுத்தி, எம்பெருமான் நின்னை நீரில்லாத வெய்ய சுரத்தே உடன்கொண்டு போவானாக நினையாநின்றான்; இதற்கு நின்கருத் தென்னோவெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனினைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

205. குறப்பாவை நின்குழல் வேங்கையம்
        போதொடு கோங்கம்விராய்
    நறப்பாடலம்புனை வார்நினை
        வார்தம் பிரான்புலியூர்

_____________________________________________________________

என்றாராகலின், வாயிற் சிறந்த மதியிற் சிறந்த வென்பதற்குத் தாய்போல நாண் சிறத்தலும் நாணினுங் கற்புச்சிறத்தலுமாகிய இரண்டும் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த நூல்களிடத்துச் சிறப்புடைய பொருளென்றுரைப்பினு மமையும். இது குறிப்பெச்சம். போக்குத் துணிய - போக்குத் துணியும் வண்ணம். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை யுடன்போக்கு நேர்வித்தல்.

204

16.12. பொருளவே லண்ணல் போக்குத் துணிந்தமை
     செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது

   
இதன் பொருள்: குறப்பாவை - குறப்பாவாய்; தம்பிரான் புலியூர் மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் - தம்பிரானது புலியூரை மறக்கக்கூடுவதொரு தீவினைவிளைவுவருமாயின்; சென்று சென்று பிறப்பான் அடுப்பினும்-பல யோனிகளினும் சென்று சென்று பிறக்கக் கூடினும்; பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்-பின்னுஞ்சென்று சேரத் தகுந் தன்மையை யுடையவர் நின் குழல் வேங்கைப் போதொடு கோங்கம் விராய்:  நின் குழலின்க ணுண்டாகிய வேங்கைப்பூவொடு கோங்கம் பூவை விரவி - நறப் பாடலம் புனைவார் நினைவார்; தேனையுடைய பாதிரிமலரைப் புனைவாராக நினையாநின்றார் எ-று.