மறப
உடன்
போக்கு
மறப்பான் அடுப்பதொர்
தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும்
பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.
205
________________________________________________________________
புனைவாரென்னு முற்றுச்சொல்
செயவெ னெச்சமாகத் திரித்துரைக்கப்பட்டது. புனைவாரா யுடன்போதலை நினையா நின்றாரென்றுரைப்பினுமமையும்.
நினைவாரென்னு மெதிர்காலத்து முற்றுச்சொல் நிகழ்காலத்துக்கண் வந்தது. கோங்கம் விராய்ப்
பாடலம் புனைவார் நினைவாரென்றதனான், நீரிலாற்றிடை நின்னொடு செல்லலுற்றா ரென்பது கூறினாளாம்.
புலியூரை யுணர்ந்தார்க்குப் பின்னை மறத்த லரிதென்னுங் கருத்தான், மறப்பானடுப்பதொர் தீவினை
வந்திடினென்றாள். புலியூரை யொருகாலுணர்ந்த துணையானே பிறவி கெடுமன்றே; அவ்வாறன்றி யதனைமறந்த
வாற்றானே பிறக்கக்கூடினு மென்னுங் கருத்தால், பிறப்பானடுப்பினுமென்றாள். அலர்நாணி உடன்
போகாது ஈண் டிற்செறிக்கப்பட்டு அவரை யெதிர்ப்படா திருத்தல் அன்பன்றென் னுங் கருத்தால்,
பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றிய ரென்றாள், பெற்றியரென்பதனை வினைக்குறிப்பு
முற்றாகவுரைப் பினுமமையும். உன்னத்தகும் பெற்றியரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அது. பயன்:
தலைமகன் உடன்போக்கு நேர்ந்தமை யுணர்த்துதல்.
205
|