பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
389

16

உடன் போக்கு

16.13 துணிவொடு வினாவல்

   
துணிவொடு வினாவல் என்பது தலைமகனினைவு கேட்ட தலைமகள் அவனினைவின்படியே துணிந்து நின்று, இந்நீரில்லாத வெய்யசுரத்தே யிப்பொழுதிவர் நம்மையுடன் கொண்டு போகைக்குக் காரணமென்னோவெனத் தோழியை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-

206. நிழற்றலை தீநெறி நீரில்லை
        கானகம் ஓரிகத்தும்
    அழற்றலை வெம்பரற் றென்பரென்
        னோதில்லை யம்பலத்தான்
    கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
        கூப்பக்கல் லாதவர்போற்
    குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
        பாகும்நங் கொற்றவர்க்கே.

206

_______________________________________________________________

16.13.  சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து
      கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.


   
இதன் பொருள்: நிழல் தலை தீ நெறி நீர் இல்லை - நிழலிடந்தீந்த வழி நீருடைத்தன்று; ஓரிகத்தும் கானகம் அழல் தலை வெம்பரற்று என்பர்-இருமருங்கு முண்டாகிய ஓரி கூப்பிடுங்காடு அழனுதிபோலு நுதியையுடைய வெய்ய பரலையுடைத்தென்று சொல்லுவர்; தில்லை அம்பலத்தான் கழல் தலை வைத்துக் கைப் போதுகள் கூப்பக் கல்லாதவர் போல்-தில்லையம்பலத்தின் கண்ணானது கழல்களைத் தந்தலைமேல்வைத்துக் கையாகிய போதுகளைக் கூப்பப்பயிலாத வரைப்போல இத்தன்மைத்தாகிய நெறிக்கண்; குழல் தலைச்சொல்லி-குழலிடத்துச் சொற்போலுஞ் சொல்லையுடையாய்; நம் கொற்றவர்க்குச் செல்லக் குறிப்பு ஆகும். என்னோ-நம் கொற்றவர்க்குச் செல்லக் குறிப்புண்டாகின்ற இஃதென்னோ! எ-று.

   
நீரில்லை யென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் நெறியென்னுமெழுவாய்க்குப் பயனிலையாயின. நெறிக்கணீரில்லை யெனவிரிப்பினு மமையும். நிழலிடந் தீயோ டொக்குநெறி; அந்நெறி நீருடைத்தன்று; கானகமெங்கு மோரி கூப்பிடும்; அக்கானகம் அழற்றலை வெம்பரலை யுமுடைத்து என்றுரைப்பினுமமையும்.