New Page 1
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை
“பேரின்பமான பிரமக்கிழத்தியோடு
ஓரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக நாயகன்
பக்குவான்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்மபோகமாக, நற்றாய் பரையாக திரோதாயி செவிலித்தாயாக
விளங்குவதைத் திருக்கோவை உணர்த்துகிறது” என அவர் கூறுவார். இறைவனை நாயகியாகக் கூறும் இக்கருத்தைப்
பலரும் மறுத்துள்ளனர்.
இறைவனை நாயகியாகவும் உயிரை நாயகனாகவும்
கூறுதல் பொருந்துவதாக இல்லை. திருமுறைகளில் நாயன்மார்கள் தங்களை நாயகிகளாகப் பாவித்து
இறைவனை நாயகனாகக் கருதியே பல பாடல்களை யாத்துள்ளனர். மணிவாசகரும் திருவாசகத்தில்
இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு அன்பு செய்து போற்றியுள்ளமை அறிதற்குரியதாகும்.
திருக்கோவையார் இத்தத்துவ அமைப்பில்
இன்றி தனிநிலையில் தில்லையம்பலவனைப் பாட்டுடைத் தலைவனாகவும் அப்பெருமானிடம் பத்திமை பூண்ட
தலைவன் தலைவி முதலானோரை கோவைக்குரிய கிளவித் தலைவன் தலைவி முதலானோராகவும் கொண்டு
பாடியருளிய நூலே இஃது என்பது அறியத்தக்கதாகும்.
அன்பர்கள் இந்நூலை இலக்கியச்
சுவைக்காக மட்டுமின்றி இந்நூல் உணர்த்தும் மெய்ந்நூற் பொருள்களையும் ஓதி உணர்ந்து பயனடைய
அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
வளர்க திருமுறை நெறி
வாழ்க உலகெலாம்
|