பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
391

New Page 1

உடன் போக்கு

தேயமும் யாவும் பெறினுங்
        கொடார்நமர் இன்னசெப்பில்
    தோயமும் நாடுமில் லாச்சுரம்
        போக்குத் துணிவித்தவே.
               207

16.15 நாணிழந்து வருந்தல்

   
நாணிழந்து வருந்தல் என்பது உடன்கொண்டு போகைக்குக் காரணங்கேட்ட தலைமகள், ஒருநாளுமென்னை விட்டு நீங்காது என்னுடனே வளர்ந்த பொலிவுடைத்தாகிய நாண் கற்பினெதிர் நிற்கமாட்டாது தன்னைவிட்டு் நீங்காத என்னைக் கழிவதாக; மகளிர் எழுபிறப்பின்கண்ணுங் குடியிற் பிறவாதொழி கவெனத் தானதற்குப் பிரிவாற்றாமையான் வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-

208. மற்பாய் விடையோன் மகிழ்புலி
        யூரென் னொடும்வளர்ந்த
    பொற்பார் திருநாண் பொருப்பர்
        விருப்புப் புகுந்துநுந்தக்

____________________________________________________________

    நீங்கள் காயமு மாவியும் போல வின்றியமையாமையின் அவற்கு வருமேத நினதென்றஞ்சி அவன் வரவு விலக்குவேனென்றாளாக வுரைப்பினுமமையும். துணிவித்ததென்பது பாடமாயின், துணிவித்ததனைச் செப்பினின்னவெனக் கூட்டியுரைக்க. அறிய - இன்ன காரணத் தானென்றறிய. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு மாட்சிமைப் படுத்தல்.

207

16.15.  கற்பு நாணினு முற்சிறந் தமையிற்
      சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.

   
இதன் பொருள்: மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் -வளத்தையுடைய பாயும் விடையையுடையவன் விரும்பும் புலியூரில்; என்னொடும் வளர்ந்த பொற்பு ஆர் திருநாண் - என்னோடுந் தோன்றி என்னோடொக்கவளர்ந்த பொலிவார்ந்த திருவையுடைய நாண்; பொருப்பர் விருப்புப் புகுந்து நுந்த-பொருப்பர்மேல் யான் வைத்த விருப்பம் இடையேபுகுந்து தள்ள நின்றநிலை குலைந்து: கற்பு ஆர் கடுங் கால் கலக்கிப் பறித்து எறிய - கற்பாகிய நிறைந்த கடிய