கற
உடன்
போக்கு
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.
208
16.16 துணிவெடுத்துரைத்தல்
துணிவெடுத்துரைத்தல் என்பது
தலைமகளைக் கற்புவழி நிறுத்திச் சென்று, நின்னோடு போதுமிடத்து நீ செல்லுங் கற்சுரம் அவளது
சிற்றடிக்கு நற்றளிராம்போலுமெனத் தோழி தலை மகனுக்கு அவடுணிவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
209. கம்பஞ் சிவந்த சலந்தரன்
ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
____________________________________________________________
காற்றலைத்துப் பிடுங்கி என்வயிற்
கிடவாமைப் புறத் தெறிய; கழிக-என்னைக் கழிவதாக; ஏழையர் எழுமையும் இற்பால் பிறவற்க-இனி
மகளிர் எழுபிறப்பின் கண்ணுங் குடியிற்பிறவா தொழிக எ-று.
நாண் கழிகவென வியையும். வாழி:
அசைநிலை. கற்பாங் கடுங்காலென்பதூஉம் பாடம். முற்சிறந்தமையின் - முன்னெண்ணச் சிறந்தமையின்.
மல்லல் மல்லெனக் கடைக்குறைந்து நின்றது. மெய்ப்பாடு: அது. பயன்: உடன்போக்கு வலித்தல்.
208
16.16. செல்வ மாதர் செல்லத்
துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல்
லியது.
இதன் பொருள்: நம்பா-நம்பா;
அம்பு அஞ்சி ஆவம்புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள்-அம்புகளஞ்சித் தூணியிற்புக் கொளிப்ப
மிக நீண்டு செவ்வரி சிதறிய கண்களையுடையாளுடைய; செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர்ச்
சீறடிக்கு-செம்பஞ்சியின் மிதிப்பினு நடுங்கும் மலர்போலுஞ் சிறியவடிக்கு; கல் சுரம் நல் தளிர்
ஆகும்-நீசெல்லுங் கல்லையுடைய சுரம் நல்லதளிராம்போலும் இவளது துணிவிருந்தவாற்றான் எ-று.
கம்பம் சிவந்த சலந்தரன்
ஆகம் கறுத்த-அச்சத்தால் வருநடுக்கத்தை வெகுண்ட சலந்தரன தாகத்தை முனிந்த; தில்லை நம்பன்
|