பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
393

அம

உடன் போக்கு

    அம்பஞ்சி ஆவம் புகமிக
        நீண்டரி சிந்துகண்ணாள்
    செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
        கும்மலர்ச் சீறடிக்கே.

209

16.17 குறியிடங் கூறல்

   
குறியிடங் கூறல் என்பது துணிவெடுத்துரைத்த தோழி, தாழாது இவ்விருட்காலத்துக் கொண்டுபோவாயாக; யானவளைக் கொண்டு வாராநின்றேன்; நீ முன்புவந்தெதிர்ப்பட்ட அக்குறியிடத்து வந்து நில்லெனத் தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

210. முன்னோன் மணிகண்ட மொத்தவன்
        அம்பலந் தம்முடிதாழ்த்
    துன்னா தவர்வினை போற்பரந்
        தோங்கும் எனதுயிரே

__________________________________________________________

சிவநகர் நல் தளிர் - தில்லையினம் பனது சிவநகரின் நற்றளிரெனக் கூட்டுக.

    சிவநகரென்பது ஒரு திருப்பதி. செம்பஞ்சியின் மிதிக்கிற் பதைக்கும் மலர்ச்சீறடியென்பன ஒருசொன்னீர்மைப்பட்டு நின்றன; இதனை யதிகாரப் புறனடையாற் கொள்க. அரிசிந்து கண்ணாளது என்னுமாறனுருபு தொகச்சொல்லாத விடத்துத் தொக்கு நின்றதெனினுமமையும். அரிசிந்து கண்ணாள் மலர்ச்சீறடியென்று கூட்டுவாரு முளர். தொல்வரை - பெரியவரை. மெய்ப்பாடு: அது. பயன்: உடன்போக்கு வற்புறுத்தல்.

209

16.17.  மன்னிய இருளில் துன்னிய குறியிற்
      கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.


   
இதன் பொருள்: எனது உயிரே அன்னாள் அரும் பெறல் ஆவி அன்னாய் - எனதுயிரை யொப்பாளது அரிய பெறுதலையுடைய ஆவியை யொப்பாய்; அருள் ஆசையினால்-நினதருண்மேலுள்ள வாசையால்; பொன் ஆர் மணி மகிழ்ப் பூ விழ யாம் விழை பொங்கு இருள் - பொன்போலும் நிறைந்த நல்ல மகிழின்பூவிழ அவை விழுகின்ற வோசையை நீ செய்யுங்குறியாக வோர்ந்துயாம் விரும்பும்