கன
உடன்
போக்கு
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே.
211
16.19 கொண்டுசென்றுய்த்தல்
கொண்டுசென்றுய்த்தல் என்பது
தலைமகன் குறியிடை நின்று, அடியொடு வழிநினைந்து, தன்னுள்ளம் வாடாநிற்ப, அந்நிலைமைக்கண், நின்னுள்ளத்துக்
கருதியதனை இப்பொழுது நினக்குத் தெய்வந் தாராநின்றது; என்றோழியையுங் கொண்டு வந்தேன்; நீ
யிவளைக் கைக்கொள்ளெனத் தோழி தலைமகளைக் கொண்டு சென்று, அவனொடு கூட்டாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
212. வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
______________________________________________________________
குளிர்ச்சியையுடைய மதியோடு பரந்த
புனலையுடைய கங்கையைச் சூடும்; பரன் புலியூர் அனிச்சம் திகழும் அம் சீறடி - பரனது புலியூரில் அனிச்சப்பூப்போல
மழகிய சிறிய வடிகள்; ஆவ - அன்னோ; அழல் பழுத்த கனிச் செந்திரள் அன்ன-தீப்பழுத்த பழத்தினது
சிவந்த திரள்போலும்; கல் கடம் போந்து கடக்கும் என்றால் - கற்றிரளை யுடையகாட்டை இங்குநின்றும்
போந்து கடக்குமாயின்; சந்தமேகலையாட்கு இனிப் புகுந்து எய்துவது என்கொல் - நிறத்தையுடைய மேகலையையுடையாட்கு
இனி யென் காரணமாக வந்தெய்துந் துன்பம் வேறென்! எ-று.
ஆவ: இரங்கற்குறிப்பு. மெய்ப்பாடு:
அழுகை. பயன்: நெஞ்சோடு- சாவுதல்.
211
16.19. வண்டமர் குழலியைக்
கண்டுகொள் கென்றது.
இதன் பொருள்: செழு
மிடற்றின் மை வந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் - வளவிய மிடற்றின்கட் கருமை யுண்டாகிய
|