16
உடன்
போக்கு
16.21 வழிப்படுத்துரைத்தல்
வழிப்படுத்துரைத்தல் என்பது ஓம்படுத்துரைத்த
தோழி, ஆயமுமன்னையும் பின்வாராமல் இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்திலுள்ள அலரையு
மொருவாற்றானீக்கி யானும்வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிருந் திருவொடுசென்று நும்பதியிடைச்
சேர்வீராமி னென இருவரையும் வழிப்படுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
214. ஈண்டொல்லை ஆயமும்
ஒளவையும்
நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக்
கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந்
தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர்
வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.
214
_________________________________________________________________
16.21. மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற்பெயரும் பாங்கிபகர்ந்தது.
இதன் பொருள்: எம்மைப்
பிடித்து ஆண்டு - எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம்
நிலவு -இன்று எல்லையைநீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம் நிலைபெற்ற; சேண்தில்லை
மா நகர்வாய் - சேய்த்தாகிய தில்லை யாகிய பெரிய நகரிடத்து; திருத்தகச்சென்று சேர்க -
நீர் பொலிவு தகச்சென்று சேர்வீராமின்; ஆயமும் ஒளவையும் ஈண்டு நீங்க - ஆயமுமன்னையும்
பின்வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க்கௌவை ஒல்லை தீர்த்து - இவ்வூரின்க ணுண்டாகிய
அலரை யொருவாற்றான் விரையநீக்கி; ஆண்டு நும்மை ஒல்லை கண்டிடக் கூடுக - யானாண்டுவந்து நும்மை
விரையக் காணக் கூடுவதாக எ-று.
சேண்டில்லை யென்பதற்கு
மதின்முதலாயின வற்றான் னுயர்ந்த தில்லையெனினுமமையும். ஒல்லைக் கண்டிடவென விகார வகையான்
வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு: அழுகை. பயன்: அச்சந் தவிர்த்தல்.
214
|