16
உடன்
போக்கு
16.22
மெல்லக்கொண்டேகல்
மெல்லக்கொண்டேகல் என்பது தோழியை விட்டு உடன்கொண்டு போகாநின்ற தலைமகன் நின்னொடு சேறலான்
இன்று இக்காடு திருந்தச் செய்யப்பட்டாற்போலக் குளிர்ச்சியை யுடைத்தா யிருந்தது; இனி நின்
சீறடி வருந்தாமற் பையச் செல்வாயாக வெனத் தன்னாய வெள்ளத்தோடும் விளையாடுமாறு போலத்
தலைமகளை மெல்லக்கொண்டு செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-
215. பேணத்
திருத்திய சீறடி
மெல்லச்செல்
பேரரவம்
பூணத் திருத்திய
பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய
வான்பதி
சேரும்
இருமருங்குங்
காணத் திருத்திய
போலும்முன்
னாமன்னு கானங்களே.
215
_________________________________________________
16.22. பஞ்சிமெல்லடிப்
பணைத்தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது.
இதன் பொருள்: பேரரவம் பூண - பெரிய வரவங்களைப் பூணும்வண்ணம்; திருத்திய பொங்கு ஒளியோன்
புலியூர் புரையும் - அவற்றின் றீத்தொழிலை நீக்கிய பெருகுமொளியையுடையவனது புலியூரையொக்கும்;
மாணத் திருத்திய வான்பதி இருமருங்கும் சேரும் -மாட்சிமைப்படக் குற்றங்கடிந்து செய்யப்பட்ட பெரியவூர்கள்
நாஞ்செல்லு நெறியி னிருபக்கமு மொன்றோடொன்று சேர்ந் திருக்கும்; முன்னா மன்னு கானங்கள் காணத்திருத்திய
போலும் - முன்னுளவாகிய காடுகள் நாஞ்சென்று காணும்வண்ணந் திருந்தச் செய்யப்பட்டனபோலும்,
அதனால், பேணத் திருத்திய சீறடி - யான் விரும்பும் வண்ணங் கைபுனையப் பட்ட சிறிய வடியையுடையாய்;
மெல்லச் செல்-பையச்செல்வாயாக எ-று.
பேணத்திருத்திய சீறடி யென்பது
சினையாகிய தன்பொருட்கேற்ற வடையடுத்து நின்றது. அரவந் திருத்தியவென வியையும். வான்பதி
சேருமென்பதற்குப் பதி நெறியைச் சேர்ந்திருக்கு
|