16
உடன்
போக்கு
16.23 அடலெடுத்துரைத்தல்
அடலெடுத்துரைத்தல் என்பது மெல்லக்கொண்டு
செல்லா நின்றவன், சேய்த்தாகச் சிலரை வரக்கண்டு தலைமகளஞ்சாநிற்ப, நின்னையன்மாராயின்
அஞ்சுவேன்; அல்லது நால்வகைத்தானையுந் திரண்டுவரினும் என்கையில் வடித்திலங்காநின்ற எஃகின்
வாய்க் கிரை போதாது; இதனை யிவ்விடத்தே காண்பாயாக வென்று, அவள தச்சந் தீரத் தன்
னடலெடுத் துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-
216. கொடித்தேர் மறவர்
குழாம்வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின்
வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
____________________________________________________________
மென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: உவகை.
பயன்: தலைமகளை அயர்வகற்றுதல்.
215
16.23. வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதருகுழலிக் கருளவனுரைத்தது.
இதன் பொருள்: நின் ஐயர்
என்னின்-நின்னையன்மாராயின்; மன்னும் அம்பலத்தோன் அடித்தேரலர் என்ன அஞ்சுவன்-நிலைபெறு
மம்பலத்தின் கண்ணானுடைய அடிகளை யாராய்ந் துணரா தாரைப்போல அஞ்சுவேன், அல்லது, கொடித் தேர்-கொடியை
யுடைய தேரும்; மறவர் குழாம்-வீரரது திரளும்; வெம் கரி நிரை-வெய்யகரிநிரையும்; கூடின்-அனைத்துந்
திரண்டுவரினும்; என்கைவடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா-என்கையில் வடிக்கப்பட் டழகுவிளங்காநின்ற
எஃகினது வாய்க்கு இரையுதவ மாட்டா; மன்னும் கடித்தேர் குழல் மங்கை - நிலைபெற்ற நறுநாற்றத்தை
வண்டுகளாராய்ந்துவருங் குழலையுடைய மங்காய்; விண்தோய் இக் கனவரைக் கண்டிடு - விண்ணினைத் தோயாநின்ற
இப்பெரிய வரையிடத் தியான்செய்வதனைக் காண்பாயாக எ-று.
கூடினென்பதற்கு என்னைக்
கிட்டினென்றுரைப்பினுமமையும். அடித்தேர் பவரென்பது பாடமாயின், என்ன வென்பதனை உவமவுருபாக்காது
இவரை யடித் தேர்பவரென்று பிறர் கருத வென்றுரைக்க.
|