பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
401

உடன் போக்கு

    அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
        நின்ஐய ரென்னின்மன்னுங்
    கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
        விண்தோய் கனவரையே.

216

16.24 அயர்வகற்றல்

   
அயர்வகற்றல் என்பது அடலெடுத்துரைத்து அச்சந் தீர்த்துக்கொண்டு போகாநின்றவன், இத்துன்பக்கடறு கடந்து சென்று இப்பொழுதே நாமின்பப்பதி காணப் புகாநின்றேம்; இனி நமக்கொரு குறைவில்லை யெனத் தலைமகளது வழிவருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

217. முன்னோ னருள்முன்னும் உன்னா
        வினையின் முனகர் துன்னும்
    இன்னாக் கடறிதிப் போழ்தே
        கடந்தின்று காண்டுஞ்சென்று

________________________________________________________________

கண்டிடிரென்பதூஉம் பாடம். மன்னுங்கடி யென்பதற்கு வண்டென வொருசொல் வருவித்துரைக்க. வரிசிலையவர் வருகுவரென - வரிசிலையவர் வாராநின்றார் இவர் யாவரென. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தன்வலியுணர்த்தி யாற்றுவித்தல். இடைச்சுரத்து அவடமரெதிர்படை தொடர்ந்து நிற்ப வழிவருவார் விலக்கி வரைவித்துக்கொடுப்ப. என்னை

    “இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
     கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக்
     கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
     வப்பாற்பட்ட வொருதிறத் தானும்”

(தொல். அகத்திணையியல் - 41) என்றார் தொல்காப்பியனார். 216

16.24.  இன்னல்வெங்கடத் தெறிவேலவன்
      அன்னமன்னவள் அயர்வகற்றியது.


   
இதன் பொருள்: முன்னோன் அருள் முன்னும் முன்னா - எல்லார்க்கும் முன்னாயவனதருளை முற்பிறப்பின்கண்ணு நினையாத; வினையின் முனகர் துன்னும் இன்னாக் கடறு இது இப்போழ்தே கடந்து - தீவினையையுடைய நீசர் சேருந் துன்பத்தைச்