பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
402

New Page 1

உடன் போக்கு

    பொன்னா ரணிமணி மாளிகைத்
        தென்புலி யூர்ப்புகழ்வார்
    தென்னா வெனஉடை யான்நட
        மாடுசிற் றம்பலமே.

217

16.25 நெறிவிலக்கிக்கூறல்

   
நெறிவிலக்கிக் கூறல் என்பது அயர்வகற்றிக்கொண்டு செல்லாநின்ற தலைமகனை, இனிச்செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை; நீ தனியை; இவள் வாடினாள்; பொழுதுஞ் சென்றது; ஈண்டுத்தங்கிப் போவாயாகவென, அவ்விடத்துள்ளோர் வழிவிலக்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

218. விடலையுற் றாரில்லை வெம்முனை
        வேடர் தமியைமென்பூ
    மடலையுற் றார்குழல் வாடினள்
        மன்னுசிற் றம்பலவர்க்

____________________________________________________________

செய்யும் பாலைநில மிதனை யிப்பொழுதே கடந்து; பொன் ஆர் அணி மணி மாளிகைத் தென் புலியூர் - பொன்னிறைந்த வழகையுடைய மணியால் விளங்கும் மாளிகையையுடைய தென்புலியூர்க்கண்; புகழ்வார் தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலம்-புகழ்ந்துரைப்பார் தென்னனே யென்று புகழ என்னையுடையான் நின்று கூத்தாடுஞ் சிற்றம்பலத்தை; இன்று சென்று காண்டும்-இன்று சென்று காண்பேம்; இதுவன்றோ நமக்கு வருகின்ற வின்பம்! எ-று.

    தென்புலியூர்ச் சிற்றம்பலமென வியையும். உடையா ரென்பது பாடமாயின், தென்னனேயென்று புகழவொரு சிறப்புடையாரென்றுரைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளையயர்வகற்றுதல். அலங்காரம்: கூற்றிடத்திரு பொருட் கண் வந்த வுயர்ச்சி வேற்றுமை.

217

16.25.  சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
      சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.

   
இதன் பொருள்: விடலை - விடலாய்; உற்றார் இல்லை - இனிச் செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை; வெம்முனை வேடர் - உள்ளார் வெய்ய முனையிடத்து வேடரே; தமியை - நீதனியை; மென் பூ மடலை