பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
403

கட

உடன் போக்கு

கடலையுற் றாரின் எறிப்பொழிந்
        தாங்கருக் கன்சுருக்கிக்
    கடலையுற் றான்கடப் பாரில்லை
        இன்றிக் கடுஞ்சுரமே.

218

______________________________________________________________

உற்று ஆர் குழல் வாடினள் - மெல்லிய பூவினிதழைப் பொருந்தி நிறைந்த குழலையுடையாள் வழிவந்த வருத்தத்தால் வாடினாள்; மன்னு சிற்றம்பலவர்க்கு அடலை உற்றாரின் - நிலைபெற்ற சிற்றம்பலத்தை யுடையவர்க் காட்படுந்தன்மையைப் பொருந்தினவர்க ளல்லாரைப்போல; எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கிக் கடலை உற்றான் -விளக்கமொழிந்து அவ்விடத்து அருக்கன்றன் கதிர்களை,ச் சுருக்கிக் கடலைச் சென்றுற்றான்; இக் கடுஞ்சுரம் இன்று கடப்பார் இல்லை - இக்கடிய சுரத்தை யிப்பொழுது கடப்பாருமில்லை; அதனாலீண்டுத் தங்குவாயாக எ-று.

   
வேடரொடு சாராத நன்மக்கள் இவர்க்கணியராதலின், அவரை உற்றா ரென்றார். வேடரி லுற்றாரில்லையென்று நன்றி செய்யாரென்பது பயப்பவுரைப்பினுமமையும். மடலென்றது தாழம்பூ மடலையென்பாருமுளர். சிற்றம்பலவர்க்கென்னு நான்கனுருபு பகைப்பொருட்கண் வந்தது. அருக்கன் பெருக்கி யென்றும் பெருகி யென்றும் பாடமாயின், கெடுதலை மங்கலமரபிற் கூறிற்றென்க.

218