16
உடன் போக்கு
16.26 கண்டவர் மகிழ்தல்
கண்டவர் மகிழ்தல் என்பது நெறிவிலக்குற்று
வழிவருத்தந் தீர்ந்து ஒருவரையொருவர் காணலுற்று இன்புற்றுச் செல்லாநின்ற இருவரையுங் கண்டு, இவர்கள்
செயலிருந்தவாற்றான் இப்பெருஞ் சுரஞ் செல்வதன்று போலும்; அதுகிடக்க இதுதானின் புறவுடைத்தாகிய
தோர் நாடகச் சுவையுடைத்தா யிருந்ததென எதிர்வருவார் இன்புற்று மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
219. அன்பணைத் தஞ்சொல்லி
பின்செல்லும்
ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
_____________________________________________________________
16.26. மண்டழற் கடத்துக்
கண்டவ ருரைத்தது.
இதன் பொருள்: அன்பு
அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் - சிறுபுறமும் அசைநடையுங்காண்டற்கு அன்பானணைத்து
அழகிய சொல்லையுடையாளது பின்னே ஆடவனொருகாற் செல்லாநின்றான்; அவன்றன்பின் பணைத்தோளி
நீடுவரும் - முன்செல்லநாணிப் புறக்கொடையும் வலிச்செலவுங் காண அவனது பின்னே வேய்போலுந் தோள்களையுடையாள்
நெடும் பொழுது செல்லாநின்றாள்; இப்பெருஞ் சுரம் செல்வது அன்று - இருந்த வாற்றான் இவரது செயல்
இப்பெரிய சுரத்தைச் செல்கை யன்று; பொன்பணைத்தன்ன இறை உறைதில்லை - பொன்னொரு வடிவு கொண்டு
பெருத்தாற்போலு மிறை யுறைகின்ற தில்லை வரப்பின்; நன்பணைப் பொலி மலர்மேல் தண் நறவு உண்
அளி போன்று-நல்லபணையிற் பொலிந்த மலரிடத்துக் குளிர்ந்த நறவை யுண்ட வண்டுகளையொத்து; ஒளிர்
நாடகம் - இன்பக்களியான் மயங்கி விளங்குவதொரு நாடகம் எ-று.
பெருஞ்சுரஞ் செல்வதன்றென்பதற்குப்
பெருஞ்சுரந் தொலை வதன்றெனினுமமையும். பொன்பணைத்தாற் போலுமிறை யென்பாருமுளர். கண்டார்க்கின்பஞ்
செய்தலின், நாடக மென்றார். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: நெறிவிலக்குதல்.
219
|