பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
405

New Page 1

உடன் போக்கு

பொன்பணைத் தன்ன இறையுறை
        தில்லைப் பொலிமலர்மேல்
    நன்பணைத் தண்ணற வுண்அளி
        போன்றொளிர் நாடகமே.

219

16.27 வழிவிளையாடல்

   
வழிவிளையாடல் என்பது கண்டவர் மகிழக் கொண்டு செல்லாநின்றவன், நெறிசெல்வருத்தத்தி னெகிழ்ந்த மேனியையுடைய நின்னைக் கண்டு கண்கடம்மாற் கொள்ளும் பயன் கொண்டனம்; இனிச் சிறிதிருந்து இக்கடுங்கானகந் தண்ணெனு மளவுஞ் செவி நிறைய நின்மொழி பருக வருவாயாகவெனத் தலைமகளுடன் விளையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-

220. கண்கடம் மாற்பயன் கொண்டனங்
        கண்டினிக் காரிகைநின்

    பண்கட மென்மொழி ஆரப்
        பருக வருகஇன்னே

______________________________________________________________

16.27.  வன்றழற் கடத்து வடிவே லண்ணல்
      மின்றங் கிடையொடு விளையா டியது.

   
இதன் பொருள்: கண்டு - நெறிசெல் வருத்தத்தி னெகிழ்ந்த மேனியை யாகிய நின்னைக்கண்டு; கண்கள் தம்மால் பயன் கொண்டனம்-கண்களாற் கொள்ளும் பயன் கொண்டனம்; காரிகை- காரிகை நீர்மையாய்; இனி நின் பண் கட மென்மொழி ஆரப் பருக இன்னே வருக-இனிச் சிறிதிருந்து நினது பண்ணினது முறைமையை யுடைய மெல்லிய மொழியைச் செவிநிறையப் பருகுவான் இவ்விடத்து வருவாயாக; விண்கள் தம் நாயகன்-விண்ணுலகங்கடம்முடைய தலைவன்; தில்லையில் மெல்லியல் பங்கன்-தில்லைக்கணுளனாகிய மெல்லியல் கூற்றையுடையான்; எம் கோன்-எம்முடைய விறைவன்; தண் கடம்பைத் தடம்போல் கடுங்கானகம் தண்ணென-அவனது குளி்ர்ந்த கடம்பையிற் பொய்கைபோலக் கடியகானகங் குளிருமளவும் எ-று.

   
தண்ணென வின்னே வருகவென வியையும். கடம்பை யென்பது ஒரு திருப்பதி. கடம்பைத் தடம்போற் கடுங் கானகங் குளிரும் வண்ணம் நின்மொழியைப் பருகவென்று கூட்டினுமமையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல்.

220