வ
உடன் போக்கு
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.
220
16.28 நகரணிமை கூறல்
நகரணிமை கூறல் என்பது இருவருந் தம்மு
ளின்புற்றுச் செல்லாநின்றமை கண்டு, இனிச் சிறிது நெறிசென்று அக்குன்றத்தைக் கடந்தால் நும்பதியாகிய
நகர் விளங்கித் தோன்றாநிற்கும்; அத்துணையுங்கடிது செல்வீராமினென எதிர்வருவார் அவர் நகரணிமை
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
221. மின்றங் கிடையொடு
நீவியன்
தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
______________________________________________________________
16.28. வண்டமர் குழலியொடு
கண்டவ ருரைத்தது.
இதன் பொருள்: மின் தங்கு
இடையொடு - மின்போலுமிடையையுடை யாளோடு; நீ வியன் தில்லைச் சிற்றம்பலவர் குன்றம் கடந்து
சென்றால்-நீயகன்ற தில்லையிற் சிற்றம்பலத்தையுடையவரது குன்றத்தைக்கடந்து அப்பாற் சிறிதுநெறியைச்
சென்றால்; குரூஉக்கமலம் துன்று அம் கிடங்கும்-நிறத்தையுடைய தாமரைப் பூ நெருங்கிய அழகிய கிடங்கும்;
வள்ளை வெள்ளை நகையார் துறைதுறை சென்று அங்கு அடைதடமும் - வள்ளைப் பாடலைப் பாடும் வெள்ளை முறுவலையுடைய
மகளிர் துறைதொறுந் துறை தொறுந் சென்று அவ்விடத்துச்சேரும் பொய்கைகளும்; புடைசூழ்தரு சேண்நகர்
- பக்கத்துச்சூழ்ந்த அத்தில்லையாகிய வுயர்ந்தநகர்; நின்று தோன்றும் - இடையறாது தோன்றும்;
அத்துணையுங் கடிது செல்வாயாக எ-று.
குழலியொடு கண்டவர் - குழலியொடு
தலைமகனைக் கண்டவர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடமணித்தென்றல்.
221
|