பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
407

New Page 1

உடன் போக்கு

    துன்றங் கிடங்குந் துறைதுறை
        வள்ளைவெள் ளைநகையார்
    சென்றங் கடைதட மும்புடை
        சூழ்தரு சேண்நகரே.

221

16.29 நகர்காட்டல்

   
நகர்காட்டல் என்பது நகரணிமை கூறக்கேட்டு இன்புறக் கொண்டு செல்லாநின்ற தலைமகன், அன்னந்துன்னிப் பிறையணிந்து சூலத்தையுடைத்தாகிய மாளிகைமேற் கொடி நுடங்க மதில்தோன்றா நின்ற அப்பெரிய நகர்காண் நம்முடைய நகராவதெனத் தலைமகளுக்குத் தன்னுடைய நகர் காட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்.

222. மின்போல் கொடிநெடு வானக்
        கடலுள் திரைவிரிப்பப்
    பொன்போல் புரிசை வடவரை
        காட்டப் பொலிபுலியூர்

____________________________________________________________

16.29.  கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத்
      தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.


   
இதன் பொருள்: நின்போல் நடை அன்னம் துன்னி - நின்னடை போலு நடையையுடைய அன்னங்கடுன்னி; மன்போல்பிறை அணி மாளிகை சூலத்தவாய் - மன்னனைப் போலப் பிறையையணிந்த மாளிகைகள் அவனைப்போலச் சூலத்தவுமாய்; முன் தோன்று நல் நீள் நகர் - முன்றோன்றுகின்ற நல்ல பெரிய நகர்; மடவாய் - மடவாய்; மின் போல் கொடி நெடு வானக் கடலுள் திரை விரிப்ப - ஒளியானும் நுடக்கத்தானும் மின்னையொக்குங் கொடிகள் பெரியவானமாகிய கடலுட் டிரையைப் பரப்ப; பொன் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் - பொன்னானியன்ற புரிசை மேருவைக் காட்டப் பொலியும் புலியூர் காண்; தொழுவாயாக எ-று.
       
   
போலென்பது அசைநிலை. நிறத்தாற் பொன்போலும் புரிசை யென்பாருமுளர். சூலத்தவாயென்னுஞ் சினைவினையெச்சம் முன்றோன்றுமென்னும் முதல்வினையோடு முடிந்தது. துன்னியென இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின்மேலேறி நின்றது.

222