|
மன
உடன் போக்கு
மன்போற் பிறையணி
மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந்
துன்னிமுன்
தோன்றுநன் னீணகரே.
222
16.30 பதிபரிசுரைத்தல்
பதிபரிசுரைத்தல் என்பது நகர் காட்டிக்கொண்டு
சென்று அந்நகரிடைப்புக்கு அவ்விடத்துள்ள குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், தெய்வப்பதி
இவையெல்லாந் தனித்தனி காட்டி, இதுகாண் நம்பதியாவதெனத் தலைமகளுக்குத் தலைமகன் பதிபரிசு காட்டாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
223. செய்குன்றுவைஇவை சீர்மலர்
வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப்
பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
______________________________________________________________
16.30. கண்ணிவர் வளநகர்
கண்டுசென் றடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி
சுரைத்தது.
இதன் பொருள்: உவை செய்
குன்று - உவை செய்குன்றுகள்; இவை சீர் மலர் வாவி-இவை நல்லமலரையுடைய வாவிகள்; அவை விசும்பு
இயங்கி நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் - அவை விசும்பின்கணியங்குதலான் வருந்துந் திங்கள்
அயர் வுயிர்க்கும் பொழில்கள்; உந்திடம் ஞாங்கர் எங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் -
உவ்விடம் மிசையெங்கு முலகத்திற் பொய் முதலாகிய குற்றங்கெட மறையவர் மறைசொல்லுமிடம்; ஏந்திழை
- ஏந்திழாய்; இந்திடமும் எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம்-இவ்விடமும் எய்தற்குக்
கருவியாகிய குன்றமாகிய நீண்டவில்லை யுடைய அம்பலவற் கிருப்பிடம்; இத்தன்மைத்திவ்வூர் எ-று.
இவையென்பது தன் முன்னுள்ளவற்றை.
உவை யென்பது முன்னின்றவற்றிற் சிறிது சேயவற்றை. அவையென்பது அவற்றினுஞ் சேயவற்றை. முன்
சொல்லப்பட்டவையே யன்றி இதனையுங் கூறுகின்றேனென்பது கருத்தாகலின், இந்திடமுமென்னுமும்மை இறந்தது
தழீஇயவெச்ச வும்மை. உந்திடம் இந்திடமெனச் சுட்டீறு
|