பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
409

New Page 1

உடன் போக்கு

    பொய்குன்ற வேதிய ரோதிடம்
        உந்திடம் இந்திடமும்
    எய்குன்ற வார்சிலை யம்பல
        வற்கிடம் ஏந்திழையே.

223

16.31 செவிலிதேடல்

   
செவிலிதேடல் என்பது இருவரையும் வழிப்படுத்தி வந்து பிரிவாற்றாதுக- வலாநின்ற தோழியை, எம்பிள்ளை எங்குற்றது? நீ கவலாநின்றாய்; இதற்குக்காரண மென்னோ வென்று வினாவிச் செவிலி தலைமகளைத் தேடாநி்ற்றல். அதற்குச் செய்யுள்-

224. மயிலெனப் பேர்ந்திள வல்லியி
        னொல்கிமென் மான்விழித்துக்
    குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
        குற்றதென் னெஞ்சகத்தே

______________________________________________________________

திரிந்து நின்றன. பண்ணிவர் மொழி - பண்போலுமொழி, இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடங் காட்டுதல்.

223

16.31.  கவலை யுற்ற காதற் றோழியைச்
      செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.

   
இதன் பொருள்:  மயில் எனப் பேர்ந்து - மயில்போலப் புடை பெயர்ந்து; இள வல்லியின் ஒல்கி - இளைய கொடிபோல நுடங்கி; மெல் மான் விழித்து-மெல்லிய மான்போல விழித்து; குயில் எனப் பேசும் எம் குட்டன் எங்குற்றது-குயில்போலச் சொல்லும் எமது பிள்ளை யாண்டையது; என் நெஞ்சகத்தே பயில் என - என்னெஞ்சின் கண்ணே தனக்குப் பயிற்சியென்று பலர் சொல்லும் வண்ணம்; பேர்ந்து அறியாதவன் தில்லைப் பல்பூங்குழலாய்-என் னெஞ்சினின்று நீங்கியறியாதவனது தில்லையிற் பலவாகிய பூக்களையுடைய குழலையுடையாய்; அயில் எனப்பேரும் கண்ணாய் - வேல் போலப் பிறழுங் கண்ணையுடையாய்; இன்று அயர்கின்றது என்கொலாம் - நீயின்று வருந்துகின்றதென்னோ? எ-று.

   
எங்குற்றதென்பது ஒருசொல். என்னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறியாதவனென் பதற்கு என்னெஞ்சின்கண்ணே நீ பயில