பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
410

பய

உடன் போக்கு

    பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
        தில்லைப்பல் பூங்குழலாய்
    அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.

224

16.32 அறத்தொடுநிற்றல்

   
அறத்தொடு நிற்றல் என்பது தேடாநின்ற செவிலிக்கு, நீ போய் விளையாடச்சொல்ல யாங்கள் போய்த் தெய்வக் குன்றிடத்தே யெல்லாருமொருங்கு விளையாடாநின்றேமாக, அவ்விடத்தொரு பெரியோன் வழியே தார்சூடிப்போயினான்; அதனைக்கண்டு நின் மகள் இத்தாரையென்பாவைக்குத் தாருமென்றாள்; அவனும் வேண்டியது மறாது கொடுப்பானாதலிற் பிறிதொன்று சிந்தியாது கொடுத்து நீங்கினான்; அன்றறியாப் பருவத்து நிகழ்ந்ததனை “உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்-கொண்டார்க் குரியர் கொடுத்தார்” என்பதனையின் றுட்கொண்டாள் போலும்; யானித்துணையு மறிவேனென்று உடன்போக்குத் தோன்றக் கூறி, தோழி அறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

225. ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
        யாவருக் கும்மெளிதாந்
    தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
        மேவித் தழல்திகழ்வேற்

___________________________________________________

வேண்டுமென்றொரு கால் யான் கூறப் பின்னீங்கியறியாதவனென் றுரைப்பினுமமையும். கண்ணிக்கென்பது பாடமாயின், அவள் காரணமாகப் போலும் இவள் வருந்துகின்றதென்று உய்த்துணர்ந்து அவட்கு நீ வருந்துகின்ற தென்னென வினாவிற்றாக வுரைக்க. மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்றுதுணர்தல்.

224

16.32.  சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியிற்
      சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.

   
இதன் பொருள்: ஆள் அரிக்கும் அரிதாய் - ஆட்செய்தல் அரிக்கு மரிதாய்; தில்லை யாவர்க்கும் எளிதாம் தாளர் இக்குன்றில் - அவ்வாட்