பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
411

New Page 1

உடன் போக்கு

    கோளரிக் குந்நிக ரன்னா
        ரொருவர் குரூஉமலர்த்தார்
    வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
        லாயத்தெம் வாணுதலே.

225

_________________________________________________________________

செய்தல் தில்லைக்க ணெல்லார்க்கு மெளிதாந் தாளை யுடையவரது இம்மலையிடத்து; தழல் திகழ் வேல் கோள் அரிக்கு-தழல் விளங்கும் வேலையுடைய கோள்வல்ல அரிமாவிற்கு; நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர்த் தார்-மறுதலை போல்வாரொருவரது நிறத்தையுடைய மலரானியன்றதாரை; வாள் அரிக் கண்ணி எம் வாள் நுதல்-வாள் போலுஞ் செவ்வரி பரந்த கண்ணையுடையளாகிய எம்முடைய வாணுதல்; வண்டல் ஆயத்துத் தன்பாவைக்கு மேவிக் கொண்டாள்-வண்டலைச் செய்யு மாயத்தின் கண்ணே தன்பாவைக்கென்று அமர்ந்துகொண்டாள்; இத்துணையு மறிவேன் எ-று.

   
ஆளரி ஒருகால் நரசிங்கமாகிய மாலெனினுமமையும். கோளரிக்கு நிகரன்னாரென்பதற்குக் கோளரிக்கொப்பாகிய அத்தன்மையரெனினுமமையும். இக்குன்றின்கண் வண்டலாயத்து மேவிக் கொண்டாளெனவியையும். தாளரிக்குன்றினென்றதனான், இது தெய்வந்தரவந்ததென்றும், பாவைக்கென்றதனான் அறியாப் பருவமென்றும், கோளரிக்கு நிகரன்னா- ரென்றதனான் இவட்குத் தக்காரென்றும், மேவியென்றதனாற் பயிர்ப்பு நீங்கிற்றென்றும், தாரென்றதனான் மெய்யுற்றதனோடொக்கு மென்றுங் கூறினாளாம். மெய்ப்பாடு: பெருமிதம் பயன்: உடன்போக்குணர்த்துதல்.

225