|
16
உடன் போக்கு
16.33 கற்புநிலைக்கிரங்கல்
கற்புநிலைக்கிரங்கல் என்பது தோழி
யறத்தொடுநிற்பக் கேட்ட செவிலி இஃதறமாயினும் இவள் பருவத்திற்குத்தகாது; இதுகிடக்க, இனியவளுக்கு
நன்மையாவது அவனை வழிபடுவதல்லது பிறிதில்லை யெனக் கற்புநிலைக் கிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
226. வடுத்தான் வகிர்மலர்
கண்ணிக்குத்
தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல்
லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
_______________________________________________________________
16.33. விற்புரை நுதலி கற்புநிலை
கேட்டுக்
காடா யுள்ள நீடா யழுங்கியது.
இதன் பொருள்: வடுத்தான்
வகிர் மலர் கண்ணிக்குத் தக்கின்று- அறமேயாயினும் வடுத்தான் வகிரப்பட்டாற்போலும் மலர்ந்த
கண்ணையுடையாட்கு இம்முதுக்குறைவு தகாது; ஆயினும், எம் அனைக்கு இனி ஆவன - எம்மனைக்கு இனி நம்மாற்
செய்யத் தகுவன; எடுத்தாற்கு இனியனவே - எடுத்தாற்கினியனவே; வேறில்லை எ-று.
தக்கன் முத்தீக் கெடுத்தான் -
தக்கனது முத்தீயைக் கெடுத்தவன்; கெடல் இல் தொல்லோன் - ஒருஞான்றுங் கேடில்லாத பழையோன்;
தில்லைப் பல் மலர் கேழ்கிளர - அவனது தில்லைக்கட் பலவாகியமலர் நிறங்கிளர; மடுத்தான் குடைந்து
அன்று அழுங்க - மடுவைத் தான் குடைந்து அன்று கெடப்புக; அழுங்கித் தழீஇமகிழ்வுற்று எடுத்தாற்கு -
அது கண்டிரங்கி யணைத்து இவ்வாறுதவி செய்யப்பெறுதலான் மகிழ்ந்தெடுத்தாற்கெனக் கூட்டுக.
தில்லைக்கணெடுத்தாற்கெனவியையும்.
வகிர்மலர் கண்ணியென்புழிச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். வகிரென்னு முவமவினை
ஒற்றுமை நயத்தால் உவமிக்கப்படும் பொருண்மேலேறிநின்றது. தானென்பதனை அசைநிலையாக்கி வடுவகிர்போலுங்
கண்ணென் றுரைப்பாருமுளர். நீடாயழுங்கல் - நெடிதா யழுங்கல், மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த
அழுகை. பயன் : தலைமகளது கற்பினைப் பாராட்டி ஆற்றாமை நீங்குதல்.
226
|