|
ம
உடன் போக்கு
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
யாவன எம்மனைக்கே.
226
16.34 கவன்றுரைத்தல்
கவன்றுரைத்தல் என்பது கற்புநிலைக்
கிரங்காநின்ற செவிலி, நெருநலைநாள் முறுவலைத்தந்து முலைமுழுவித் தழுவி நீ சிறிய விரகுகள் செய்தவெல்லாம்
இன்றவ் வலியகாட்டைச் செல்ல வேண்டிப் போலும்; இதனை யப்பொழுதே யறியப்பெற்றிலேனென்று அவணிலை
நினைந்து கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்-
227. முறுவல்அக் கால்தந்து
வந்தென்
முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாம்முழு துஞ்சிதையத்
______________________________________________________________
16.34. அவள்நிலை நினைந்து
செவிலி கவன்றது.
இதன் பொருள்: ஒளி இழை
- ஒளியிழை; அக்கால் முறுவல் தந்து-உள்ளத் தொன்றுடையளாதலின் அக்காலத்து முறுவலை யெனக்குத்
தந்து; வந்து என் முலை முழுவித் தழுவி - வந்து எனது முலையை முத்தங்கொண்டு என்னைப் புல்லி; சிறுவலக்காரங்கள்
செய்த எல்லாம் - அவ்வாறு சிறியவிரகுகள் செய்தவெல்லாம்; முழுதும் சிதையத் தெறு வலக் காலனைச்
செற்றவன் சிலம்பலம் சிந்தியார் - எல்லாப்பொருளுமழிய வெகுளுதல் வல்ல அக்காலனை வெகுண்ட வனது
சிற்றம்பலத்தைக் கருதாதார்; உறு வலக்கானகம் தான் படர்வான் ஆம் - சேரும் வலியகாட்டைத் தான்
செல்லவேண்டிப் போலும்! அக்காலத்திஃதறிந்திலேன்! எ-று.
எனக்கு வெளிப்படாமற்
பிரிவார்செய்வன செய்தா ளென்னுங் கருத்தான் வலக்கார மென்றாள். குறித்துணர்வார்க்கு
வெளிப்படு மென்னுங் கருத்தாற் சிறுமைப்படுத்தாள். தெறும் வெற்றியையுடைய காலனெனுமமையும்.
227
|