பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
414

New Page 1

உடன் போக்கு

    தெறுவலக் காலனைச் செற்றவன்
        சிற்றம் பலஞ்சிந்தியார்
    உறுவலக் கானகந் தான்படர்
        வானா மொளியிழையே.

227

16.35 அடிநினைந்திரங்கல்

    அடிநினைந்திரங்கல் என்பது நிலைமை நினைந்து கவலாநின்ற செவிலி, அனிச்சப்பூமேன் மிதிப்பினும் ஆற்றாது பதைத்துப் பொங்காநின்ற வடிகள் இன்று செறிந்த பரலையுடைய காட்டின்கட் பாவியவாறென்னோவென அவளடி நினைந் திரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்-

228. தாமே தமக்கொப்பு மற்றில்
        லவர்தில்லைத் தண்ணனிச்சப்
    பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
        பொங்கும்நங் காய்எரியுந்

______________________________________________________________

16.35.  வெஞ்சுர மும்மவள் பஞ்சிமெல் லடியுஞ்
      செவிலி நினைந்து கவலை யுற்றது.


    இதன் பொருள்: தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை - தாமே தமக்கொப்பாக வேறோரொப்பில்லாதவரது தில்லையில்; தண் அனிச்சப் பூமேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் - குளிர்ந்த வனிச்சப்பூவின்மேன் மிதிப்பினும் நடுங்கித் தன்னடிகள் பண்டு கொப்புட்கொள்ளும் நங்காய்; எரியும் தீமேல் அயில்போல் செறி பரல் கானில் - எரியாநின்ற தீயின்மேற் பதித்த வேல்போலச் செறிந்த பரலையுடைய காட்டின்கண்; சிலம்பு அடி பாய் - சிலம்பையுடைய அவ்வடியைப்பாவி; அருவினையேன் பெற்ற அம்மனைக்கு - அரியவினையையுடையேன் பெற்ற அன்னைக்கு; நடக்க ஆமே - இன்று நடக்க வியலுமோ! ஆண்டென் செய்கின்றாள்! எ-று.

   
செறிவு ஒத்தபண்பன்று. நிலத்தைச் செறிந்த பரலெனினுமமையும். அயில்போல் செறிபரலென்பது பாடமாயின். அயில் போலுஞ் செறிபரலென்றுரைக்க, இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

228