|
த
உடன் போக்கு
தீமேல் அயில்போற் செறிபரற்
கானிற் சிலம்படியாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே.
228
16.36 நற்றாய்க்குரைத்தல்
நற்றாய்க்குரைத்தல் என்பது அடிநினைந்
திரங்காநின்ற செவிலி, கற்புமுதிர்வு தோன்ற நின்று என்னை யிடைவிடா மற்றேடி யழாநின்ற பேதையறிவு
இன்றென்னைத் தேய்வியா நின்றதென்று அவள் உடன்போனமை ஆற்றாது நற்றாய்க்குக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
229. தழுவின கையிறை
சோரின்
தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
பேதை யறிவுவிண்ணோர்
______________________________________________________________
16.36. முகிழ்முலை மடந்தைக்கு
முன்னிய தறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி
செப்பியது.
இதன் பொருள்: தழுவின கை
இறை சோரின்-தன்னைத் தழுவின என்கை சிறிதுசோருமாயின்; தமியம் என்றே நையாத் தளர்வுற்று-நாந்தமிய
மென்றேகருதி நைந்து உள்ளந்தளர்ந்து; அழுவினை செய்யும் அம் சொல் பேதை அறிவு - அழுந்தொழிலைச்
செய்யும் அழகிய சொல்லையுடைய பேதையதறிவு; விண்ணோர் குழுவினை உய்ய நஞ்சு உண்டு-விண்ணோரது திரள்பிழைக்கத்
தானஞ்சை யுண்டு; அம்பலத்துக் குனிக்கும் பிரான் செழுவின தாள்-அம்பலத்தினின்று கூத்தாடு மிறைவனுடைய
வளவியதாள்களை; பணியார் பிணியால் உற்றுத் தேய்வித்தது-பணியாதார் பிணிபோலும் பிணியான்
மிக்கு என்னைக் குறைவித்தது எ-று.
உய்ய நஞ்சுண்டென்னுஞ்
சொற்கள் ஒரு சொன்னீர்மைப் பட்டு உய்வித்து என்னும் பொருளவாய், குழுவினை யென்னு மிரண்டா
வதற்கு முடிபாயின. அறிவைக்கருத்தாவாகவும் பிணியைக் கருவியாகவுங் கொள்க. முன்னியது-வந்தது. மெய்ப்பாடும் பயனும்
அவை.
229
|