|
New Page 1
உடன் போக்கு
குழுவினை உய்யநஞ் சுண்டம்
பலத்துக்
குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.
229
16.37 நற்றாய்வருந்தல்
நற்றாய் வருந்தல் என்பது உடன்போனமைகேட்டு
உண் மகிழ்வோடு நின்று, ஒரேதிலன் பின்னே தன் தோழியை விட்டு, என்னையு முன்னே துறந்து, சேராதார்
முன்னே ஊர் அலர் தூற்ற அருஞ்சுரம் போயினாள்; இனி யானெங்ஙனமாற்றுவேனென நற்றாய்
பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
230. யாழியன் மென்மொழி
வன்மனப்
பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை
முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
______________________________________________________________
16.37. கோடாய் கூற
நீடாய் வாடியது.
இதன் பொருள்: யாழ் இயல்
மென் மொழி வல் மனப் பேதை-யாழோசையினியல்பு போலும் இயல்பையுடைய மெல்லிய மொழியையும் வலியமனத்தையுமுடையபேதை;
ஒரு ஏதிலன் பின் - ஒரு நொதுமலன்பின்னே; தோழியை நீத்து - தன்றோழியைவிட்டு; என்னை முன்னே
துறந்து - என்னை முற்காலத்தே நீங்கி; இம் மூதூர் மறுக-இம்மூதூரிலுள்ளார் அலரெடுத்துக் கலங்க;
துன்னார்கள் முன்னே - சேராதார் முன்னே; மால் வணங்க அன்று ஆழி தந்தான் அம்பலம் பணியாரின்
- திருமால் வணங்குதலான் அன்றாழியைக் கொடுத்தவனது அம்பலத்தைப் பணியாதாரைப்போல; அரும்
சுரம் சென்றாள் - அரிய சுரத்தைச் சென்றாள்; இனி யெங்ஙனமாற்றுகேன் எ-று.
இற்செறிக்கப்பட்ட பின்னர்ப்
பாரமுகத்த ளென்பதனை உடன் போன பின்ன ருணர்ந்தாளாகலின், என்னை முன்னே துறந்தென்றாள்.
வாழி: அசைநிலை. மெய்ப்பாடும், பயனும் அவையே.
230
|