|
வ
உடன்
போக்கு
வாழியிம் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.
230
16.38 கிளிமொழிக்கிரங்கல்
கிளிமொழிக்கிரங்கல் என்பது,
பிரிவாற்றாது வருந்தா நின்றவள் அவள்போன போக்கன்றி, இக்கிள்ளை என்னெஞ்சை யீராநின்றதெனத்
தன்றாய் செலவுணர்ந்து வருந்தாநின்ற கிளியினது மொழிகேட் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
231. கொன்னுனை வேல்அம்
பலவற்
றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
சேரு மெனஅயரா
______________________________________________________________
16.38. மெய்த்தகை மாது வெஞ்சுரஞ்
செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம்
பியது.
இதன் பொருள்; கொல்
நுனை வேல் அம்பலவற் றொழாரின்-கொற்றொழிலமைந்த நுனையையுடைத்தாகிய சூல வேலையுடைய அம்பலவனை
வணங்காதாரைப்போல; கொடியோள் குன்றம் என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என-கொடியாள்
மலைநெறியை யெவ்வண்ணஞ்சென்றாள் ஆண்டெவ் வண்ணந் தங்குமென்றியான்கூற; அயரா-தன்றாய்
செலவுணர்ந்து மயங்கி; என் அனை போயினள்-என்னுடைய அன்னை போயினாள்; யாண்டையள்-அவளெவ்விடத்தாள்;
என்னைப் பருந்து அடும் என்று-இனி யென்னைப் பருந்து கொல்லு மென்று சொல்லி; என்
அனை போக்கு அன்றிக்
கிள்ளை என் உள்ளத்தை ஈர்க்கின்றது-
என்னுடைய வன்னை
போக்கொழிய அவள் கிளியென் னெஞ்சை யீராநின்றது எ-று.
என்னணஞ் சென்றனள் என்னணஞ்
சேருமென்று நினைந்த யராவெனக் கிளிமேலேறவுரைப்பினு மமையும். என்னன்னை போக்கன்று ஈர்கின்ற
திக்கிள்ளையென மறுத்துரைப்பினு மமையும். மெய்த்தகை-மெய்யாகிய கற்பு; புனையாவழகுமாம். மெய்ப்பாடும்
பயனும் அவை.
231
|