|
என
உடன் போக்கு
என்னனை போயினள் யாண்டைய
ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக்
கிள்ளையென்
னுள்ளத்தை யீர்கின்றதே.
231
16.39 சுடரோடிரத்தல்
சுடரோடிரத்தல் என்பது கிளிமொழி
கேட்டிரங்கா நின்றவள், பெற்றவென்னோடு தன்கிளியிருந்து வருந்த இதனையுந் துறந்து அறிவுமுதிர்ந்து,
அழற்கடஞ் சென்றாண்முகத்தை நின் கதி்ர்களான் வாட்டாது தாமரைமலர்போல மலர்த்துவாயாக வெனச்
சுடரோடிரந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
232. பெற்றே
னொடுங்கிள்ளை வாட
முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
______________________________________________________________
16.39. வெஞ்சுரந் தணிக்கெனச்
செஞ்சுட ரவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.
இதன் பொருள்: சுடர் வானவனே
- சுடராகிய வானவனே; பெற்றேனொடும் கிள்ளை வாட - பெற்றவென்னோடுந்தன் கிளியிருந்து வருந்த
இதனையுந்துறந்து; முதுக்குறை பெற்றிமிக்கு - அறிவு முதிர்ந்த வியல்புமிக்கு; நல் தேன் மொழி -
நல்ல தேன்போலு மொழியை யுடையாள்; அழல் கான் நடந்தாள் முகம் - அழலையுடைய காட்டின் கணடந்தவளது
முகத்தை; மல்தேன் மலரின் மலர்த்து - நின்வெங்கதிர்களான் வாட்டாது வளவியவண்டை யுடைய தாமரைமலர்போல
மலர்த்துவாயாக; இரந்தேன்-நின்னையானி ரந்தே னிதனை எ-று.
அணுகப் பெற்றேன் நான் -
ஒருவாற்றாற் றன்னையணுகப் பெற்றேனாகியயான்; பிறவி பெறாமல் செய்தோன் தில்லைத்தேன் பிறங்கு
மற்றேன்மலர் - பின் பிறவியைப் பெறாத வண்ணஞ் செய்தவனது தில்லையின் மதுமிகு மற்றேன்
மலரெனக் கூட்டுக.
பெற்றேனொடுமென்பது எண்ணொடுவுமாம்.
தணிக்கவென்னு மிறுதியகரங் குறைந்துநின்றது. மெய்ப்பாடும். பயனும் அவை.
232
|