|
New Page 1
உடன் போக்கு
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
தேன்சுடர் வானவனே.
232
16.40 பருவ நினைந்து கவறல்
பருவ நினைந்து கவறல் என்பது
சுடரோடிரந்து வருந்தா நின்றவள், கற்பிக்குமுதுபெண்டீரு மின்றித் தானவனுக்குச் செய்யத் தகுங்
குற்றேவல் செய்யவல்லள்கொல்லோ வென்று அவளது பருவ நினைந்து கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்-
233. வைம்மலர் வாட்படை
யூரற்குச்
செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாந்தில்லை யான்மலைவாய்
_______________________________________________________________
16.40. முற்றா முலைக்கு
நற்றாய் கவன்றது.
இதன் பொருள்: தில்லையான்
மலை வாய் - தில்லையா னுடைய இம்மலையிடத்து; மொய்ம் மலர்க் காந்தளைப் பாந்தள் என்று எண்ணி-மொய்ம்மலர்க்
காந்தளது பூவினைப் பெரும்பாம் பென்று கருதி; துண்ணென்று ஒளித்து-துண்ணென்று மறைந்து; கைம் மலரால்
கண் புதைத்துப் பதைக்கும்-கைம் மலர்களாற் கண்புதைத்து நடுங்கும்; எம் கார் மயில் என் மைம்மலர்
வாள் கண்ணி-எம்முடைய கார்மயிலாகிய என்னுடைய மையழகு பெற்ற வாள்போலுங் கண்ணையுடையாள்; வைம்மலர்
வாள் படை ஊரற்கு-கூர்மையையுடைய மலரணிந்த வாளாகிய படைக்கலத்தையுடைய வூரனுக்கு; செய்யும் குற்றேவல்
வல்லள்கொல்-தான்செய்யத்தகுங் குற்றேவல்களைக் கற்பிக்கு முதுபெண்டிருமின்றித் தானே செய்ய
வல்லளாமோ! ஆண்டென் செய்கின்றாள்! எ-று.
மற்றென்பது அசை. மொய்ம்மலர்க்காந்தள்
முதலாகிய தன் பொருட்கேற்ற வடையடுத்து நின்றது. பிரிவினான் மகண்மேற் செல்லுங் கழிபெருங் காதலளாதலின்,
எங்கார்மயிலென்றும் என்வாட் கண்ணி யென்றும், பல்காற்றன்னோடடுத்துக் கூறினாள். தில்லையான்
மலைவாய்ப் பதைக்குமெனவியையும். நோக்கென்னு
|