பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
420

New Page 1

உடன் போக்கு

    மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
        றெண்ணித்துண் ணென்றொளித்துக்
    கைம்மல ராற்கண் புதைத்துப்
        பதைக்குமெங் கார்மயிலே.

233

16.41 நாடத் துணிதல்

   
நாடத்துணிதல் என்பது பருவநினைந்து கவலாநின்ற தாய்க்கு, நீ கவன்று மெலியவேண்டா, யான் அவள் புக்கவிடம் புக்குத் தேடுவேனெனக் கூறி, செவிலி அவளை நாடத் துணியாநிற்றல். அதற்குச்செய்யுள்-

234. வேயின தோளி மெலியல்விண்
        ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
    பாயின சீர்த்தியன் அம்பலத்
        தானைப் பழித்துமும்மைத்

_____________________________________________________________

மலங்காரமாய்ப் பாம்பிற் கஞ்சுமயிலென இல்குணமடுத்து வந்ததென்பாரு முளர். மெய்ப்பாடும் பயனும் அவையே.

233

16.41.  கோடாய் மடந்தையை
      நாடத் துணிந்தது.

   
இதன் பொருள்: விண்ணோர் - விண்ணவர்; தக்கன் வேள்வியின் வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத்தானைப் பழித்து - தக்கனது வேள்வியின்கட் பரந்த புகழையுடையனாகிய அம்பலத்தானை யிகழ்ந்துகூறி; மும்மைத் தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து - மூன்றன்றொகுதியாகிய தீயினது வலியையுந் தலையையுங் கண்ணையுமிழந்து; திசை திசை தாம் போயின எல்லை எல்லாம் புக்கு - திசை திசை தோறுந் தாம்போயின வெல்லையெல்லாம் புக்கு; பொன்னினை நாடுவன் - பொன்னினைத் தேடுவேன்; வேயின தோளி - வேயின் றன்மைய வாகிய தோள்களையுடையாய்; மெலியல் - நீ மெலியவேண்டா எ-று.

   
தொக்கபொருட்குந் தொகுதிக்கு மொற்றுமையுண்மையின், ஆற்றன் முதலாயினவற்றை யிழத்தலை விண்ணோர் மேலேற்றினார். திகைதிகை யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: நற்றாயை யாற்றுவித்தல்.