என
பதிப்புரை
என்பது இந்நூலின் பெருமையை
விளக்கும் சாற்றுக் கவியாகும். இப்பாடலில் ஆரணம் என்பது வேதத்தையும், காரணம் என்பது முதலையும்,
ஏரணம் என்பது அளவைநூலையும், எண்ணர் என்பது அளவை நூல் வல்லாரையும், எழுத்து என்பது இயற்றமிழ்
இலக்கணத்தையும் குறிக்கும்.
மணிவாசகர் அருளிய திருக்கோவையாரின்
சிறப்பை இலக்கணக் கொத்து நூலாசிரியர் ஸ்ரீ சாமிநாத தேசிகர்,
“பல்காற் பழகினும் தெரியா
வுளவேல்
தொல்காப் பியந்திரு வள்ளுவர்
கோவையார்
மூன்றினும் முழங்கும்”
- இலக். கொத்து, பாயி.பா.7
என உரைப்பதோடு, ‘மாணிக்கவாசகர்
அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற் கலந்திருந்து
அருமைத் திருக்கையால் எழுதினார்’ எனப் பாராட்டி உரைப்பார்.
திருக்கோவையார் நானூறு செய்யுட்களை
உடையதாய்ப் புலவர் பெருமக்களால் போற்றப் பெறுவதையும், இந்நூல் திருவளர் தாமரை எனத் தொடங்கப்
பெறுதலையும் கருத்துட் கொண்டு, இந்நூலையே நானூறு இதழ்களை உடைய தாமரை எனவும், அத்தாமரை தில்லைப்
பெருமானின் அருட்கதிரால் மலர்ந்தது எனவும், புலவர்கள் வண்டுகளாய் அம்மலரில் பொதிந்துள்ள தேனை
நுகர்பவர்கள் எனவும் கூறி, மணிவாசகரால் தில்லைப் பெருமான் திருவடிகளில் சூட்டப்பட்டது இத்தாமரை
மலர் எனவும் உருவகப்படுத்தி ஒரு புலவர் அழகியதொரு சாற்றுக் கவிதையை அளித்துள்ளார்.
உருவாரும் தமிழ்ச்சங்கத் தடம்பொய்கைத்
தோன்றி
உயர்ந்தோங்கு மெய்ஞ்ஞான ஒளியையுடைத்
தாகி
மருவாரும் கிளவிஇதழ் நானூ றாகி
மதுப்பொருள்வாய் மதிப்புலவர்
வண்டாய் உண்ணத்
தருவாரும் புலியூரின் உலகுய்யக்
குனிப்போன்
தடங்கருணை யெனும்இரவி தன்கதிரால்
அலரும்
திருவாத வூராளி திருச்சிற்றம்
பலவன்
திருவடித்தா மரைச்சாத்தும் திருவளர்தா
மரையே.
-ஆன்றோர் வாக்கு
குமரகுருபரமுனிவர் இந்நூலைக் காமஞ்சான்ற
ஞானப்
|