பனுவல
பதிப்புரை
பனுவல் எனப் போற்றி யுரைப்பார்.
திருக்கோவையார் தில்லைச்
சிற்றம்பலவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவ்விறைவனது பொருள் சேர். புகழை விரித்துரைக்கும்
நிலையில் விளங்கும் அகப்பொருள்நூலாகும்.
தருமையாதீனம் பன்னிரு திருமுறைப்
பதிப்பு வரிசையில் இந்நூல் தருமை ஆதீனப் புலவர் மகாவித்துவான் முனைவர் திரு. சி. அருணை
வடிவேலு முதலியார் எழுதிய விளக்கக் குறிப்புரையோடு 1966 ஆம் ஆண்டு குருபூசை விழா மலராக வெளி
வந்தது.
பன்னிரு திருமுறைகளில் திருக்கோவையாருக்கு
மட்டும் பழமையான பேராசிரியர் உரை உள்ளது. திருப்பணந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் பேராசிரியர்
உரையோடு திருக்கோவையார் வெளியிடப் பெற்றுள்ளது. புலவர்கள் பலரும் போற்றிக் கையாளும் இவ்வுரையுடன்
திருக்கோவையாரை வெளியிட வேண்டுமெனத் தருமை ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பணித்தருளிய வண்ணம் இந்நூல், ஈழத்து, மன்னார், மாதோட்டம்,
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் நன்கொடையால் ஞானசம்பந்தம் பதிப்பகத்தில்
வெளியிடப்பெறுகிறது.
இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான
முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை - யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர்,
மறவன்புலவு திரு க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில்
நிறைவேற்றியுள்ளார்.
அன்பர்கள் பலரும் இந்நூலை ஓதி
உணர்ந்து பயன் பெறுவார்களாக.
கட்டளை விசாரணை, ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின்
திருக்கடவூர் தேவஸ்தானம், உத்தரவுப்படி,
தருமை ஆதீனம். சுந்தரமூர்த்தித் தம்பிரான்
|