பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
423

மன

உடன் போக்கு

    மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
        தான்பெறு மாறுமுண்டேல்
    உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
        நான்மறை யுத்தமரே.

236

16.44 சுவடுகண்டறிதல்

   
சுவடுகண்டறிதல் என்பது சோதிடம் பெற்றுச் செல்லா நின்றவள், இம்முரம்பின்கட் கிடந்த இவை தீவினையே னெடுத்து வளர்த்த மாணிழை சீறடி;  உவை அக்கள்வ னடியாமெனச் சுவடு கண்டறியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

237. தெள்வன் புனற்சென்னி யோன்அம்
        பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
    முள்வன் பரல்முரம் பத்தின்முன்
        செய்வினை யேனெடுத்த

______________________________________________________________

தான் பெறுமாறும் உண்டேல் - நிலைபெற்ற கடிமலரையுடைய கூந்தலை யுடையாளை இன்னுந் தான் பெறுமாறு முண்டாயின்;  நால்மறை உத்தமரே-நான்மறையையுடைய தலைவீர்; உன்னுங்கள் - நும் முள்ளத்- தானாராய்மின்கள்; தீது இன்றி ஓதுங்கள்-ஆராய்ந்து குற்றந்தீரச் சொல்லுமின்கள் எ-று.

    அருளாற் பெறுமாறுமுண்டேலென வியையும். தேவர் சென்றிரப்ப நஞ்சை நினைத்தலுங் கைம்மலர்க்கண் வந்திருந்த தாகலின், கருதப் படும் வெவ்விட மெனினுமமையும். யாங்கடியயரத் தான் கடிமலர்க் கூந்தலைப் பெறுமாறு முண்டேலென்றுரைப்பினுமமையும். இப் பொருட்குத் தானென்றது தலைமகனை தீதின்றியுன்னுங்களெனினுமமையும். உய்த்துணர்வோரை-வெளிப்படாத பொருளையேதுக்களாலுணர்வோரை. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: மருட்கை. பயன்: எதி்ர்காலச் செய்கை யுணர்தல்.

236

16.44.  சுவடுபடு கடத்துச்
      செவிலிகண் டறிந்தது.


   
இதன் பொருள்: தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் - தெள்ளிய பெரியபுனலையுடையத்தாகிய