|
ஒள
உடன் போக்கு
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.
237
16.45 சுவடுகண்டிரங்கல்
சுவடுகண்டிரங்கல் என்பது சுவடுகண்டறிந்து
அவ்விடத்தே நின்று தவிசின்மேன் மிதிப்பினும் பதைத்துக் கொப்புட் கொள்ளாநின்ற இக்கான்மலர்,
இன்றொரு விடலைபின்னே போதற்குத் தகுங்காலை எவ்வாறொத்தனவென அடிச்சுவடுகண் டிரங்காநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
238. பாலொத்த நீற்றம்
பலவன்
கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி
கொப்புள்கொள்ளும்
______________________________________________________________
சென்னியை யுடையவன தம்பலத்தைக்
கருதாதாரது இனஞ்சேரும்; முள்வன் பரல் முரம்பத்தின் இங்கிவை - முள்ளையும் வலியபரலையுமுடைய இம்முரம்பின்கட்கிடந்த
இவை: முன்செய் வினையேன் எடுத்த ஒள்வன் படைக் கண்ணி சீறடி - முற்காலத்துச் செய்யப்பட்ட
தீவினையையுடைய யானெடுத்து வளர்த்த ஒள்ளிய வலிய படைபோலுங் கண்ணினையுடையாளுடைய சிறிய வடிச்சுவடாம்;
உங்குவை அக் கள்வன் பகட்டு உரவோன்
அடி என்று கருதுவன் - இனி உவற்றை அக்கள்வனாகிய
பகடுபோலும் வலியையுடையானுடைய அடிச்சுவடென்றுய்த்துணரா
நின்றேன். எ-று.
இங்கிவை உங்குவை யென்பன
ஒருசொல்.
237
16.45. கடத்திடைக் காரிகை
அடித்தலங் கண்டு
மன்னருட் கோடா யின்ன லெய்தியது.
இதன் பொருள்: கோலத்
தவிசின் மிதிக்கின் - கோலத்தையுடைய தவிசின்மேன் மிதிப்பினும்; பால் ஒத்த நீற்று அம்பலவன்
கழல் பணியார் பிணி வாய் - பாலொத்த நீற்றையுடைய அம்பலவனது கழல்களைப் பணியாதாரது வருத்தம்போலும்
வருத்தம்வாய்ப்ப; பதைத்து அடி கொப்புள் கொள்ளும் - நடுங்கி அவ்வடிகள் பண்டு கொப்புளங்
|