New Page 1
உடன் போக்கு
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே.
238
16.46 வேட்டமாதரைக் கேட்டல்
வேட்டமாதரைக் கேட்டல் என்பது
சுவடுகண்டிரங்கா நின்று, அதுவழியாகச் செல்லாநின்றவள், இவ்வாறு அறியாப் பருவத்தளாய்த் தனக்கியைபில்லாத
சுரத்தின்கண் அயலானொருவனுடன் போந்தாள்; அவளை நீ கண்டாயோவென வேட்ட மாதரைக் கேளாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
239. பேதைப் பருவம் பின்சென்
றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
_______________________________________________________________
கொள்ளும்; வினையேன் பெற்ற மாண்
இழை கால்மலர்-தீவினை யேன் பெற்ற மாணிழையுடைய அத்தன்மையவாகிய காலாகிய மலர்கள்; இன்று
வேல் ஒத்த வெம் பரற் கானத்தின் ஓர் விடலைபின் போம் கால் ஒத்தன-இன்று வேலையொத்த வெய்யபரலையுடைய
காட்டின்கண் ஒருவிடலை பின் போதற்குத் தகுங்காலை யொத்தன; இதனையெவ்வாறு ஆற்றவல்லவாயின! எ-று.
தவிசு - தடுக்குமுதலாயின. கான்மலரென
அவற்றை மலராகக் கூறினமையாற் காலொத்தனவென வுவமித்தாள். பிணியாயென்றும், பிணிபோலென்றும்,
காலொத்திராவென்றும் பாடமோதுவாருமுளர். காலென்றது அடியை.
238
16.46. மென்மலர் கொய்யும்
வேட்ட மாதரைப்
பின்வரு செவிலி பெற்றி
வினாயது.
இதன் பொருள்: போதிற்
பொலியும் தொழில் புலிப்பற் குரல் பொற்றொடி - பூவின்கட்பொலியுந் தொழிலினையும் புலிப்பல்லை
யுடைய கழுத்தினையுமுடைய பொற்றொடியாய்; பேதைப் பருவம் சென்றது பின்-பேதையாகிய பருவங்கழிந்தது
சுரம் போந்தபின்; முன்றில் எனைப் பிரிந்தால் ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள்-
|