ஏத
உடன் போக்கு
ஏதிற் சுரத்தய லானொடின்
றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
பற்குரற்
பொற்றொடியே.
239
16.47 புறவொடு புலத்தல்
புறவொடு புலத்தல் என்பது வேட்டமாதரைக்
கேட்டு அது வழியாகச் செல்லாநின்றவள், ஏதிலனுமாய்த் தமியனுமாயவன் சொற்றுணையாக வெய்ய
சுரத்தே மாதர் சென்றால், எழிலையுடைய புறவே, இது நினக்குத் தகுதியன்றென்று கூறிற்றிலை; நீ
வாழ்வா யாகவெனப் புறவொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
240. புயலன் றலர்சடை ஏற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
_____________________________________________________________
இவ்வாறறியாப் பருவத்தளாய்
முன்றிற்க ணென்னைச் சிறிது நீங்கிற் றமியளாய் நடுங்குதலான் ஊதையாற் சுழலும் வல்லியை
யொப்பாள்; முத்தன் தில்லை அன்னாள் - முத்தனது தில்லையை யொப்பாள்; ஏதில் சுரத்து அயலானொடு
இன்று ஏகினள் - அவள் வெம்மை முதலாயினவற்றாற் றனக்கென்று மியல்பில்லாத சுரத்தின் கண் அயலானொருவனோடு
இன்றுபோயினாள்; கண்டனையே - அவளை நீ கண்டாயோ? அவளெவ்வண்ணம்போயினாள்? எ-று.
தில்லையுன்னாரென்பதூஉம் பாடம்.
பெற்று வினாய தென்பதூஉம் பாடம்.
239
16.47. காட்டுப் புறவொடு
வாட்ட முரைத்தது.
இதன் பொருள்: புயல்
அன்று அலர் சடை ஏற்றவன்-நீரை அன்று விரிந்த சடையின்கணேற்றவன்; தில்லைப் பொருப்பரசி
பயலன்-தில்லைக்கணுளனாகிய பொருப்பிற் கரசியது கூற்றையுடையான்; தனைப் பணியாதவர் போல் மிகு
பாவம் செய்தேற்கு-அவன் றன்னைப் பணியாதாரைப் போல மிக்க பாவத்தைச் செய்தேற்கு;
|