பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
427

கயலன

உடன் போக்கு

    கயலன் தமியன்அஞ் சொற்றுணை
        வெஞ்சுரம் மாதர்சென்றால்
    இயலன் றெனக்கிற் றிலைமற்று
        வாழி எழிற்புறவே.

240

16.48 குரவொடு வருந்தல்

   
குரவொடு வருந்தல் என்பது புறவொடு புலந்து போகா நின்றவள், என்னுடைய பாவை நின்னுடைய முன்னே இக்கொதிக்குங் கடத்தைக் கடப்பக்கண்டுநின்றும், இன்னவாறு போனாளென்று எனக்கு வாயுந் திறக்கின்றிலை; இது நினக்கு நன்றோவெனக் குரவொடுவாடி யுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

241. பாயும் விடையோன் புலியூ
        ரனையவென் பாவைமுன்னே
    காயுங் கடத்திடை யாடிக்
        கடப்பவுங் கண்டுநின்று

______________________________________________________________

அயலன் தமியன் அம் சொல் துணை மாதர் வெஞ்சுரம் சென்றால்-ஏதிலனுமாய்த் தமியனுமா யவனது அழகியசொல்லே துணையாக மாதர் வெய்ய சுரத்தைச் சென்றால்; எழில் புறவே - எழிலையுடைய புறவே;  இயல் அன்று எனக்கிற்றில்லை - இது தகுதி யன்றென்று கூறிற்றிலை;  வாழி-வாழ்வாயாக எ-று.

    இது கூறிற்றாயின் அவள் செல்லாளென்பது கருத்து - பொருப்பரையன் மகளாதலிற் பொருப்பரசியெனத் தந்தை கிழமை மகட்குக் கூறப்பட்டது. பாவஞ் செய்தேற்கியலன்றெனக்கிற்றிலை யெனக்கூட்டுக. வெஞ்சுரமாதல் கண்டாலென்பது பாடமாயின், ஆதலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. வெஞ்சுரம் போதல் கண்டாலென்பதூஉம் பாடம்.

240

16.48.  தேடிச் சென்ற செவிலித் தாயர்
      ஆடற் குரவொடு வாடி யுரைத்தது.

   
இதன் பொருள்: குழை எழில் வீச-குழை எழிலைச் செய்ய; வண்டு ஓலுறுத்த-வண்டுகள் நின்பாவையையோலுறுத்த; நின்பாவையும் நீயும் நின்று நிலாவிடும் நீள் குரவே-அப்பாவையு நீயும் நின்று நிலாவும் பெருங்குரவே;  பாயும் விடையோன் புலியூர்