வ
உடன் போக்கு
வாயுந் திறவாய்
குழையெழில்
வீசவண்
டோலுறுத்த
நீயும்நின்
பாவையும் நின்று
நிலாவிடும்
நீள்குரவே.
241
16.49 விரதியரை வினாவல்
விரதியரை வினாவல் என்பது குரவொடுவருந்திச் செல்லா நின்றவள், பத்தியர்போல ஒருபித்தி தன்
பின்னேவர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோவென விரதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
242. சுத்திய
பொக்கணத் தென்பணி
கட்டங்கஞ்
சூழ்சடைவெண்
பொத்திய
கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
_________________________________________________
அனைய என்பாவை-பாய்ந்து செல்லும் விடையையுடையவனது புலியூரை யொக்கும் என்னுடைய பாவை; முன்னே
காயும் கடத்திடை ஆடிக் கடப்பவும் கண்டு நின்று-நின்முன்னே கொதிக்குங் கடத்தின் கண் அசைந்து
அதனைக்கடப்பவும் விலக்காது கண்டு நின்று; வாயும் திறவாய்-அத்துணையேயன்றி இன்னவாறு நிகழ்ந்ததென்று
எனக்கு வாயுந் திறக்கின்றில்லை; இது நினக்குத்தகுமோ! எ-று.
நிலாவினையென்பது பாடமாயின், வழிச்சுரஞ் செல்லக் கண்டும் வாய்திறந்து ஒன்றுங்கூறாது குழையெழில்வீச
வண்டோலுறுத்த நின்று விளங்கினையென்று கூட்டியுரைக்க. குழையெழில் வீச வண்டோலுறுத்த வென்பன அணியாகிய
குழைவிளங்க வென்பதூஉம் செவிலிய ரோலாட்ட வென்பதூஉந் தோன்ற நின்றன. இப்பாட்டைந் திற்கும்
மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
241
16.59. வழிவரு
கின்ற மாவிர தியரை
மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.
இதன் பொருள்: சுத்திய
பொக்கணத்து - சுத்தியை யுடைத்தாகிய பொக்கணத்தையும்; என்பு அணி - என்பாகிய வணியையும்;
|