பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
429

பத

உடன் போக்கு

    பத்தியர் போலப் பணைத்திறு
        மாந்த பயோதரத்தோர்
    பித்திதற் பின்வர முன்வரு
        மோவொர் பெருந்தகையே.

242

_______________________________________________________________

கட்டங்கம் - கட்டங்கமென்னும் படைக்கலத்தையும், சூழ்சடை - சூழ்ந்த சடையினையும்; பொத்திய வெண் கோலத்தினீர் - மெய்ம் முழுதும் மூடிய வெண்கோலத்தையு முடையீர்; புலியூர் அம்பலவர்க்கு உற்ற பத்தியர் போல-புலியூர்க்க ணுண்டாகிய அம்பலத்தையுடையவர்கண் மிக்க பத்தியையுடையாரைப் போல;  பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் பித்தி-பெருத்திறுமாந்த முலைகளையுடைய ளொருபேதை;  தன் பின்வர ஓர் பெருந்தகை முன் வருமோ - தனக்குப் பின்வர ஒருபெருந்தகை முன்னே வருமோ? உரைமின் எ-று.

    சுத்தி - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டா னமைக்கப்படுவதொன்று. என்பணி யென்புழி இயல்பும், கட்டங்கமென்புழித் திரிபும் விகாரவகையாற் கொள்க. கடங்கமென்பது மழு. இது கட்டங்கமென நின்றது. வெண்கோலம் - நீறணிந்த கோலம். பத்தியர்க்குப் பணைத்தல் உள்ளத்து நிகழும் இன்புறவால் மேனிக்கண்வரு மொளியும், ஒடுங்காமையும். இறுமாத்தல் - தாழாதவுள்ளத்தராய்ச் செம்மாத்தல். முலைக்குப் பணைத்தல் பெருத்தல்; இறுமாத்தல்-ஏந்துதல். வெண்பத்திய கோலத்தினீரென்ற பாடத்திற்கு வெண்ணீற்றாற் பத்திபட விட்ட முண்டத்தையுடைய கோலமென்றுரைக்க.