16
உடன் போக்கு
16.50 வேதியரை வினாவல்
வேதியரை வினாவல் என்பது விரதியரை
வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், மான்போலு நோக்கினையும், மயில் போலுஞ் சாயலையுமுடைய
மான் ஓரேந்தலோடு நும்மெதிரே வரக்கண்டீரோவென வேதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
243. வெதிரேய் கரத்துமென்
தோலேய்
சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே.
243
______________________________________________________________
16.50. மாதின்பின் வருஞ்செவிலி
வேதியரை விரும்பிவினாயது.
இதன் பொருள்: வெதிர்
ஏய் கரத்து - மூங்கிற்றண்டு பொருந்திய கையினையும்; மெல் தோல் ஏய் சுவல் - மெல்லிய கலைத்
தோலியைந்த சுவலினையும்; வெள்ளை நூலின் - வெள்ளை நூலினையும்; கொண்மூ அதிர் ஏய் மறையின்
இவ்வாறு செல்வீர் - கொண்மூவினது முழக்கம்போலு மறையொலியினையுமுடைய இந்நெறிச் செல்வீர்; ஒரு
மான் - ஒருமான்; தில்லை அம்பலத்துக் கதிர் ஏய் சடையோன் கரமான் என -தில்லையம்பலத்தின்
கணுளனாகிய மதிசேர்ந்த சடையையுடையவனது கரத்தின்மான் போல மருண்ட நோக்கத்தளாய்; மயில்போல்-மயில்போல
வசைந்த சாயலாளாய்; சுரமே வெறுப்ப ஒரு ஏந்தலொடு எதிரே வருமே-வருத்துஞ் சுரந்தானே கண்டுதுன்புற
ஓரேந்தலோடு நும்மெதிரே வந்தாளோ? உரைமின் எ-று.
தோலேய்ந்த சுவலின்கணுண்டாகிய
வெள்ளை நூலினையு மெனினுமமையும். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளைக் காண்டால்.
|