ற
உடன் போக்கு
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.
244
16.52 வியந்துரைத்தல்
வியந்துரைத்தல் என்பது புணர்ந்துடன்
வருவோரை வினாவி, அதுவழியாகப் போகாநின்றவள், தன்மகணின்ற நிலையையும், அவன்கையின் வேலினால்
வேங்கைபட்டுக் கிடந்த கிடையையுங்கண்டு, வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
245. பூங்கயி லாயப்
பெரருப்பன்
திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
_______________________________________________________________
16.52. வேங்கைபட்டதும் பூங்கொடிநிலையும்
நாடாவருங் கோடாய்கூறியது.
இதன் பொருள்: பூங் கயிலாயப்
பொருப்பன் திருப்புலியூரது என்ன -பொலிவினையுடைய கைலாயமாகிய பொருப்பையுடைய வனது திருப்புலியூரதனைப்போல; தீங்கை
இலாச் சிறியாள் நின்றது இவ்விடம்-குற்றத்தையுடையவளல்லாத என் சிறியாள் நின்றது இவ்விடத்து; சென்று-சென்று; எதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து-தன்னோடெதிர்ந்த புலியின்வாயின்கட் பெரிய கையைமடுத்து; கிடந்து
அலற-விழுந்து கிடந் தலறும் வண்ணம்; திண் திறல் ஆண்டகை அயிலால் பணிகொண்டது ஆங்கு - திண்ணிய
திறலையுடைய, ஆண்டகை வேலாற் பணிகொண்டது அவ்விடத்து; அதனால் அவர் போயின நெறியிதுவே எ-று.
தீங்கையிலாவென்புழி இன்மை
உடைமைக்கு மறுதலை யாகிய வின்மை. மகளடிச்சுவடுகிடந்தவழிச் சென்று நின்றனளாதலின், அதனை இவ்விடமென்றும்,
வேங்கைபட்ட விடத்தை யவ்விடமென்றுங் கூறினாள். வேங்கை தன் காதலியையணுகாமல் அதுவரும் வழிச்
சென்றேற்றானாதலிற் சென்றென்றாள். சென்று பணி கொண்ட தென வியையும். மெய்ப்பாடு அது. பயன்: ஆற்றாமை
நீங்குதல்.
245
|