New Page 1
உடன் போக்கு
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே.
245
16.53 இயைபெடுத்துரைத்தல்
இயைபெடுத்துரைத்தல் என்பது வேங்கைபட்டது
கண்டு வியந்து, அதுவழியாகச் செல்லாநின்றவள், எதிர்வருவாரை வினாவ, அவர் நீ கூறாநின்றவரைக்
குன்றத்திடைக்கண்டோம்; அவ்விருவருந் தம்முளியைந்து செல்லாநின்றமைகண்டு, எல்லாவற்றையு முடைய
ளாகிய தன் காதலியோடு ஒருவடிவாய் விளையாடும் புலியூர னென்றே கருதி, யாங்களெல்லாமொத்து,
மிகவும் அவ்வெழிலைத் தொழ நினைந்தோம்; அந்நன்மை சொல்லலாவ தொன்றன்றென எதிர்வருவார்
அவரியைபெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
246. மின்றொத் திடுகழல்
நூபுரம்
வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
றாம்புலி யூரனென்றே
____________________________________________________________
16.53. சேயிழை யோடு செம்மல்
போதர
ஆயிழை பங்கனென் றயிர்த்தே
மென்றது.
இதன் பொருள்: அன்னை-அன்னாய்; நீ
சொன்ன கொள்கையர் குன்றத்திடைக் கண்டனம் - நீ கூறிய கோட்பாட்டை யுடையாரைக் குன்றத்திடைக்
கண்டேம்; மின் தொத்து இடுகழல் நூபுரம் - அவ்விருவரு மியைந்து சேறலின், மின்றிரளுண்டாகாநின்ற
அவனது கழலும் அவளது சிலம்பும்; வெள்ளை செம்பட்டு - அவனது வெண்பட்டும் அவளது செம்பட்டும்; மின்ன
- விளங்க; ஒன்று ஒத்திட - ஒருவடிவை யொத்தலான்; உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்று - எல்லாவற்றையு
முடையளாகிய தன்காதலியோ டொருவடிவாய் விளையாடும் புலியூரனென்றே கருதி; ஒத்து நன்று எழிலைத் தொழ
உற்றனம்-யாங்களெல்லாமொத்துப் பெரிது மவ்வழகைத் தொழ நினைந்தேம்; என்னது ஓர் நன்மைதான்
- அந்நன்மை யெத்தன்மையதோர் நன்மைதான்! அது சொல்லலாவதொன்றன்று எ-று.
|