பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
434

நன

உடன் போக்கு

நன்றொத் தெழிலைத் தொழவுற்
        றனமென்ன தோர்நன்மைதான்
    குன்றத் திடைக்கண் டனமன்னை
        நீசொன்ன கொள்கையரே.

246

16.54 மீளவுரைத்தல்

   
மீளவுரைத்தல் என்பது இயைபெடுத்துரைத்தவர், அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப்போய்த் தில்லையினெல்லையைச் சென்றணைவர்; இனி நீ செல்வதன்று, மீள்வதே காரியமெனத் தேடிச் செல்லாநின்ற செவிலியை, மீளக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

247. மீள்வது செல்வதன் றன்னையிவ்
        வெங்கடத் தக்கடமாக்
    கீள்வது செய்த கிழவோ
        னொடுங்கிளர் கெண்டையன்ன

________________________________________________

என்னதோர் நன்மையென்றதனான், அஃதறமாதலுங் கூறப்பட்டதாம். தானென்பது அசைநிலை, கொள்கையரை யென்னு முருபு விகாரவகையாற் றொக்கது. என்ன நன்மையதா மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு. உவகை. பயன்: செவிலியை யெதிர்வருவார் ஆற்றுவித்தல்.

246

16.54.  கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து
      நடுங்கன்மின் மீண்டும் நடமி னென்றது.


    இதன் பொருள்: 
கிளர் கெண்டை அன்ன நீள்வது செய்த கண்ணாள்-புடை பெயராநின்ற கெண்டைபோலும் நீடலைச் செய்த கண்ணை- யுடையாள்; இவ்வெங்கடத்து - வெய்ய விச்சுரத்தின் கண்; அக்கடமாக்கீள்வது செய்த கிழவோனொடும் - அத்தன்மைத் தாகிய கடமாவைப் பிளத்தலைச் செய்த கிழவோனோடும்; இந்நெடுஞ்சுரம் நீந்தி-இந்நெடியசுரத்தை நீந்தி அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப் போய்; எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவர் -  எம்மை யாளுதலைச் செய்தவனது தில்லையினெல்லையைச் சென்றணைவர், அதனால், அன்னை-அன்னாய்; மீள்வது - செயற்பாலது மீள்வதே;  செல்வது அன்று - சேறலன்று எ-று.