பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
435

உடன் போக்கு

    நீள்வது செய்தகண் ணாளிந்
        நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
    ஆள்வது செய்தவன் தில்லையி
        னெல்லை யணுகுவரே.

247

16.55 உலகியல்புரைத்தல்

   
உலகியல்புரைத்தல் என்பது மீளக்கூறவும் மீளாது கவலா நின்ற செவிலிக்கு, சந்தனமு முத்துஞ் சங்கும் தாம் பிறந்தவிடங்கட்கு யாதும் பயன்படாது. தம்மைவிரும்பி யணிவாரிடத்தே சென்று பயன்படாநிற்கும்; அதுபோல மகளிருந்தாம் பிறந்த விடத்துப் பயன்படார்;  நீ கவலவேண்டாவென, உலகியல்பு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

248. சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
        முத்தும்வெண் சங்குமெங்கும்
    விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
        யாம்வியன் கங்கையென்னும்

__________________________________________________

சுரங் கடத்தல் இருவர்க்கு மொக்குமெனினும், நீள்வது செய்த கண்ணாணீந்தியெனத் தலைமகண்மேற் கூறினார், வெஞ்சுரத்திற்கவள், பஞ்சின் மெல்லடி தகாவாகலின். அணுகுவரென்புழித்தலைமகள் தொழிலு முண்மையின், நீந்தியென்னுமெச்சம், வினைமுதல் வினை கொண்டதாம்; திரித்துரைப்பாருமுளர். கிழவோனொடு மென்றதனால், அவன்  பற்றுக்கோடாக நீந்தினாளென்பது விளக்கினார். இனி ஒடுவை எண்ணொடுவாக்கி யுரைப்பினுமமையும். உம்மை: அசைநிலை.

247

16.55.  செவிலியது கவலைதீர
       மன்னியஉலகியன் முன்னியுரைத்தது.


   
இதன் பொருள்: சுரும்பு இவர் சந்தும் - நறுநாற்றத்தாற் சுரும்பு சென்று பரக்குஞ் சந்தனமும்;  தொடு கடல் முத்தும் - தோட்கப் பட்ட கடலின் முத்தும்;  வெண் சங்கும் - வெண்சங்கும்; எங்கும் விரும்பினர்பால் சென்று மெய்க்கு அணியாம் - எத்தேயத்துந் தாம்பிறந்த விடங்கட்கு யாதும் பயன்படாது தம்மை விரும்பி யணிவாரிடத்தே சென்று அவர்மெய்க்கு அணியாகா நிற்கும்; வியன்கங்கை என்னும் பெரும்புனல் சூடும் பிரான்-அகன்ற கங்கை