New Page 1
உடன் போக்கு
பெரும்புனல் சூடும்
பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி
யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே.
248
16.56 அழுங்குதாய்க் குரைத்தல்
அழுங்குதாய்க் குரைத்தல் என்பது
உலகியல்பு கூறவும் மீளாது நின்று, தானெடுத்து வளர்த்தமை சொல்லிக் கவலாநின்ற செவிலியை,
முன்னிலைப்புறமொழியாக, இவர் தாம் இல்லின்க ணெடுத்து வளர்த்தவர் போலும்; அவர்போய்த் தம்மை
யிருவரையுங் கூட்டுவித்த தெய்வப் பதியாகிய தில்லையிடத்துப் பழனங்களைச் சென்றணைவரெனத் தம்முட்
கூறுவார்போன்று கூறி, மீட்டுக்கொண்டு போகாநிற்றல். அதற்குச் செய்யுள்-
249. ஆண்டி லெடுத்தவ ராமிவர்
தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
_____________________________________________________________
யென்னாநின்ற பெரும் புனலைச் சூடும்
பிரான்; சிவன் - சிவன்; சிற்றம்பலம் அனைய கரும்பு அன மென்மொழியாரும் - அவனது சிற்றம்பலத்தை
யொக்குங் கரும்பு போலும் மெல்லிய மொழியினையுடைய மகளிரும்; காணுநர்க்கு அந் நீர்மையர் -
ஆராய்வார்க் கத்தன்மையர்; நீ கவலவேண்டா எ-று.
சங்கு மணியாயும் வளையாயும் அணியாம்.
எங்குமணியா மெனவியையும். சிற்றம் பலத்து மன்னுங் கரும்பன மென்மொழி யாரென்பது பாடமாயின்,
சிற்றம்பலத்தையுடைய தில்லையினுளதாங் கரும்புபோலு மென் மொழியை யுடையாரென்றுரைக்க.
248
16.56. செழும்பணை யணைந்தமை
அழுங்குதாய்க் குரைத்தது.
இதன் பொருள்: இவர்
தாம் ஆண்டு இல் எடுத்தவர் ஆம் - இவர் தாம் அவ்விடத்து இல்லின்கணெடுத்து வளர்த்தவர்
போலும்; தீண்டில்-யாவராயினுந் தம்மையணுகில்; எடுத்து அவர் தீவினை
|