தூண
உடன் போக்கு
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃறாமரை
கீழும் பழனங்களே.
249
_________________________________________________________________
தீர்ப்பவன் தில்லையின்வாய்-அவர்
நரகத்தழுந்தாமலெடுத்து அவரது தீவினையைத் தீர்ப்பவனது தில்லையின்கண்; தூண்டில் எடுத்தவரால் தெங்கொடு
எற்ற - தூண்டிலைவிழுங்கிய வரால் தெங்கொடு மோத; பழம் விழுந்து - அதன் பழம் விழுந்து; பாண்டில்
எடுத்தபல் தாமரை கீழும் பழனங்கள் - கிண்ணம்போலும் பூக்களையுயர்த்திய பலவாகிய தாமரையைக்
கிழிக்கும் பழனங்களை; அவர் போய் அல்குவர் - அவர்சென்று சேர்வர்; இனியோரிடரில்லை எ-று.
தில்லையின்வாய்ப் பழனங்களெனவியையும்.
ஆண்டி லெடுத்தவராமிவர் தாமென்று தம்முட்கூறிப் பின் செவிலிக்குக் கூறினாராக வுரைக்க. இவ்வாறு
பகராது செவிலிகேட்ப முழுவதூஉந் தம்முட் கூறினாராக வுரைப்பினுமமையும். தூண்டிலானெடுக்கப்பட்டவராலெனினுமமையும்.
இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: செவிலிக்கியல்பு கூறி அவளை மீள்வித்தல். நில்லாவளை
(பா.192) தொட்டு இதுகாறும்வரப் பாலைத் திணை கூறியவாறறிக.
249
உடன்போக்கு முற்றிற்று.
|