பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
438

17

17. வரைவுமுடுக்கம்

இவ்வாறுடன்போக்கு நிகழாதாயின், வரைந்து கோடனி கழும். அது நிகழுமிடத்துத் தோழியான் வரைவு முடுக்கப் பட்டும் வரைபொருட்பிரிந்து வந்தும் நிகழுமென்ப, அவற்றுள், வரைவு முடுக்கம் வருமாறு-

    வருத்தங் கூற லவன்மறுத் துரைத்த
    லுள்ளது கூற லேதங் கூறல்
    பகல்வர லென்ற றொழுதிரந் துரைத்தல்
    சிறைப்புறங் கூறன் மந்திமேல் வைத்தல்
    கண்டுயி லாமை கண்டா ருரைத்தல்
    பகலுடம் பட்டாள்போன் றிரவர லென்றல்
    இரவுடம் பட்டாள்போன்று பகல்வர லென்றல்
    இரவும் பகலும் வரவொழி கென்றல்
    காலங் கூறல் கூறுவிக் குற்றல்
    செலவு கூறல் பொலிவழி வுரைத்தலென்
    றீரெண் கிளவியு மியம்புங் காலை
    வாரணி முலையாய் வரைவு முடுக்கம்

_____________________________________________________________

    வரைவுமுடுக்கம் - இதன் பொருள்: வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல், பெரும் பான்மை கூறிமறுத்தல், உள்ளது கூறிவரைவு கடாதல், ஏதங் கூறியிர வரவுவிலக்கல், பழிவரவுரைத்துப் பகல்வரவுவிலக்கல், தொழுதிரந்து கூறல், தாயறிவுகூறல், மந்திமேல்வைத்து வரைவுகடாதல், காவன் மேல்வைத்துக் கண்டுயிலாமைகூறல், பகலுடம்பட்டாள் போன்றிரவரவுவிலக்கல், இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கல், இரவும்பகலும் வரவுவிலக்கல், காலங்கூறி வரைவுகடாதல், கூறுவிக் குற்றல், செலவு நினைந்துரைத்தல், பொலிவழிவுரைத்தது வரைவு கடாதல் எனவிவை பதினாறும் வரைவுமுடுக்கமாம் எ-று. அவற்றுள்-